ARTICLE AD BOX
கராச்சி,
சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது. இதன் காரணமாக அந்த அணி பல்வேறு விமர்சங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அணி வரும் 16ம் தேதி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
இதில் முதலில் டி20 தொடரும் அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரும் நடக்கிறது. இதையடுத்து இந்த தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 அணியில் இருந்து முன்னணி வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளனர். சல்மான் அலி ஆகா டி20 அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் டி20 அணிக்கு ஷதாப் கான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஒருநாள் போட்டி அணிக்கு முகமது ரிஸ்வான் கேப்டனாக தொடர்கிறார். இந்த அணியில் பாபர் அசாம் இடம் பிடித்துள்ளார். ஆனால் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாக ஷாகின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப் ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை.
பாகிஸ்தான் டி20 அணி விவரம்: சல்மான் அலி ஆகா (கேப்டன்), ஹசன் நவாஸ், ஒமைர் யூசுப், முகமது ஹாரிஸ், அப்துல் சமத், முகமது இர்பான் கான், குஷ்தில் ஷா, ஷதாப் கான் (துணை கேப்டன்), அப்பாஸ் அப்ரிடி, ஜஹாந்தத் கான், முகமது அலி, ஷாகின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், சுப்யான் முகீம், அப்ரார் அகமது, உஸ்மான் கான்.
பாகிஸ்தான் ஒருநாள் அணி விவரம்: முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, அகிப் ஜாவித், பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், இமாம் உல்-ஹக், குஷ்தில் ஷா, முகமது அலி, முகமது வாசிம், முகமது இர்பான் கான், நசீம் ஷா, சுப்யான் முகீம், தையப் தாஹிர்.