ARTICLE AD BOX
கேரளா உணவின் சுவையில் மிளிரும், வித்தியாசமான ஒரு ஸ்பெஷல் உணவு, கிழி பரோட்டா. இது வெறும் பரோட்டா மட்டுமல்ல அல்ல. மசாலா நிறைந்த கிரிஸ்பியான பரோட்டா, மிருதுவான குழம்பு, அரோமாட்டிக் கறிகள் என அனைத்தும் ஒரு வாழையிலையில் கட்டி, அதை ஆவியில் வேக வைத்து செய்யப்படும் அற்புதமான உணவு. வாழை இலையின் மணத்துடன் கலந்த மசாலா, கறியின் சுவை ஆகியவை வேற லெவலில் இருக்கும். கேட்கும் போதே சுவைக்க வேண்டும் போல் இருக்கிறதா? வாங்க இதை எப்படி செய்வது என தெரிந்த கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பரோட்டா தயாரிக்க :
மைதா - 2 கப்
உப்பு - தேவையான அளவு
பால் - 1/2 கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
வெறும் வயிற்றில் ஃபுரூட் ஜூஸ் குடிக்க கூடாது...ஏன்னு காரணம் தெரியுமா?
மசாலா செய்ய தேவையான பொருட்கள் :
சிக்கன் / காய்கறிகள் - 200 கிராம் (உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - 1 டீஸ்பூன்
புதினா, மல்லித்தழை - சிறிதளவு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிழி பரிமாற:
வாழையிலை - 2 (சுத்தமாக துடைத்தது)
நெய் - சிறிதளவு (முடிவில் தடவ)
செய்முறை:
- பரோட்டா மாவு தயார் செய்வதற்கு மைதாவில் உப்பு, பால், சிறிது எண்ணெய், தேவையான தண்ணீர் சேர்த்து, மென்மையான மாவாக பிசைந்து, 30 நிமிடங்கள் மூடி வைத்து விடவும்.
- மசாலா தயாரிக்க ஒரு பானையில் நெய் சூடாக்கி, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். மசாலா தூள்கள், உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின்னர் சிக்கன் அல்லது காய்கறிகளை சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.
- பரோட்டா உருட்டி சிறிது நேரம் வைக்க வேண்டும். பரோட்டா மாவை உருட்டி, மிதமான அளவில் தட்டிக்கொண்டு, நடுவில் சிறிது மசாலா வைத்து மூடவும்.
- வாழையிலையில் நெய் தடவி, அந்த மடித்த பரோட்டாவை வைத்து, அழகாக சுற்றி, நன்றாக மடிக்கவும்.
- மூடியுள்ள பாத்திரத்தில் அல்லது இட்லி குக்கரில், 15 நிமிடங்கள் ஸ்டீம் செய்து, இதன் இயற்கையான வாசனை வெளிவரும் படி செய்யவும்.
- கிழி பரோட்டாவை சுற்றி இருக்கும் வாழை இலையை பிரித்ததும், உள்ளே இருக்கும் மசாலா வாசனையும், பரோட்டாவின் மென்மையும், வாழையிலையின் இயற்கையான சுவையும் கலந்துவிடும். இது உண்மையிலேயே உணவுப் பிரியர்களுக்கு செம விருந்தாக இருக்கும்.
தினமும் ஒரு ஸ்பூன் கருப்பு எள் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா ?
சிறப்பு குறிப்புகள்:
- பரோட்டா மாவில் சிறிது முட்டை சேர்த்தால் மேலும் மென்மையாக இருக்கும்.
- காய்கறிகள் விரும்பினால், மஷ்ரூம், கேரட், பீன்ஸ் சேர்க்கலாம்.
- மசாலாவில் சிறிது தேங்காய்பால் சேர்த்தால் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கிழி பரோட்டா கிடைக்கும்.
இந்த கேரளா கிழி பரோட்டா ஒரு நிறைவான உணவாக, உங்கள் குடும்ப விருந்துக்கு நண்பர்களுக்கு பார்டி கொடுக்க எளிதில் தயாரிக்கலாம்.