ARTICLE AD BOX
தான் தற்கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்று பின்னணி பாடகி கல்பனா தெரிவித்துள்ளார். அவருக்கும், அவரது மகளுக்கும் இடையே கருத்து வேற்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Singer Kalpana: பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் செவ்வாய்க்கிழமை அன்று ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கப்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மருத்துவமனையில் குணமடைந்து வரும் கல்பனா, தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல் பரவியது.

ஆனால் இதை மறுத்த கல்பனாவின் மகள் தயா பிரசாத், கல்பனா தற்கொலைக்கு முயலவில்லை என்றும் அதிகப்படியான துக்க மாத்திரை எடுத்துக் கொண்டதால் மயக்கமடைந்ததாகவும் தெரிவித்தார். இந்நிலையில் பாடகி கல்பனா தான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
''இரவில் தூக்கம் வரவில்லை என்பதால் நான் தூங்க எட்டு மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். ஆனால் அது உதவவில்லை. இதனால் நான் மேலும் 10 மாத்திரைகளை உட்கொண்டதால் சுயநினைவை இழந்தேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு நினைவில் இல்லை'' என்று அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றாரா? உண்மையை புட்டு புட்டு வைத்த மகள்

அதாவது கல்பனா அதிக அளவு தூக்க மாத்திரை உட்கொண்டு மயங்கி விழுந்துள்ளார். அதற்கு முன்பாக அவர் கணவர் பிரசாத்துக்கு போன் செய்தபோது போன் எடுக்கவில்லை. இதனால் அவர் அக்கம்பக்கத்தினரிடம் போன் மூலம் தெரிவித்துள்ளார். உடனே அக்கப்பக்கத்தினர் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது, கல்பனா படுக்கையறையில் மயக்கமடைந்திருப்பதைக் கண்டனர். உடனே வரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்பது தெரியவந்துள்ளது.
கல்பனா தனது மகள் தயா பிரசாத்துடன் கல்வி தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கல்பனா தனது மகளை ஹைதராபாத்தில் படிக்க விரும்பினார். ஆனால் தயா அத்ற்கு மறுப்பு தெரிவித்தார். இது தொடர்பாக மார்ச் 3 ஆம் தேதி தாயுக்கும், மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி எர்ணாகுளத்திலிருந்து திரும்பிய கல்பனா, அன்று இரவு தூங்க முடியாமல் தவித்து அதிக அளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டது தெரியவந்துள்ளது.

அதே வேளையில் "தயவுசெய்து எதையும் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். எங்கள் குடும்பம் நன்றாக இருக்கிறது, என் அம்மா சில நாட்களில் திரும்பி வருவார்" என்று கல்பனாவின் மகள் தயா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். கல்பனா இசைக்குடும்பத்தை சேர்ந்தவர். அவரது பெற்றோர், டி.எஸ். ராகவேந்திரா மற்றும் சுலோச்சனா ஆகியோர் பின்னணிப் பாடகர்கள்.
தனது 5 வயதில் பாடத் தொடங்கிய கல்பனா, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உட்பட பல மொழிகளில் 1,500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோர் இசையிலும், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்தும் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார் கல்பனா.
Kayadu Lohar: கயாடு லோகர் மனதை கவர்ந்த செலபிரிட்டி கிரஷ் இந்த தமிழ் நடிகரா? அவரே கூறிய தகவல்!