நாளை வெளியாகும் 'மாஸ்க்' படத்தின் பர்ஸ்ட் லுக்!

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். இவர் 'லிப்ட், டாடா, ஸ்டார்' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'பிளடி பெக்கர்' படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதனை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'மாஸ்க்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில், வருகிற மே மாதம் இப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, மாஸ்க் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10.30 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.�

Best wishes to SP Chockalingam and Andrea Jeremiah on their maiden production venture.#MASK first look drops Tomorrow at 10:30 AM!!#VetriMaaran @GrassRootFilmCo @BlackMadra38572 @Kavin_m_0431 @andrea_jeremiah @gvprakash @Raasukutty16 @iRuhaniSharma @RDRajasekar #RamarEditor pic.twitter.com/Wx3CYn1gpF

— Grass Root Film Co (@GrassRootFilmCo) February 25, 2025
Read Entire Article