ARTICLE AD BOX
அவர்கள் தவறு செய்தால் நான் மாட்டிக்கொள்வேன்.. மாரி செல்வராஜ் ஓபனா பேசிட்டாரே ப்பா
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக உருவான திரைப்படம் வாழை. அது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் - காளமாடன் படத்தை இயக்கி முடித்திருக்கும் அவர் அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார். ஏற்கனவே அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கர்ணன் என்ற படத்தை கொடுத்தார்கள். எனவே இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். கற்றது தமிழ், தங்க மீன்கள் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்தையே தரமாக கொடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன்னை பார்க்க வைத்தார். அந்தப் படத்தில் வந்த வசனங்கள், க்ளைமேக்ஸ் ஷாட் என அனைத்துமே பக்காவாக இருந்ததன் காரணமாக படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கர்ணன்: பரியேறும் பெருமாள் படத்தை முடித்துவிட்டு தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார் மாரி. அந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். உண்மை சம்பவத்தை வைத்து அந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தாலும் வரலாற்றை மாரி செல்வராஜ் திரித்து படத்தில் காட்டிவிட்டார் என்று விமர்சனங்கள் எழுந்தன. அதேசமயம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ஹிட்டையே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி நடிகர் கோவிந்தா மனைவியை பிரிந்தார்..முடிவுக்கு வந்த 37 ஆண்டு திருமண வாழ்க்கை!
மாமன்னன் மாரி: இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கினார் அவர். இந்தப் படமும் யாரும் பேசாத அரசியலை பேசியது. உதயநிதிக்கு இது கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக வடிவேலு பல வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் தரமான கம்பேக் கொடுத்தார். அவரை இன்னொரு பரிணாமத்தில் மாரி செல்வராஜ் காட்டியிருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி அப்ளாஸை அள்ளிக்கொடுத்தது.
கொண்டாடப்பட்ட வாழை: இப்படி மூன்று படங்கள் இயக்கிய அவர் நான்காவது படமான வாழையில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை பேசினார். அதுவும் பெரும்பாலானோரால் கொண்டாடப்பட்டது. ஆனால் எழுத்தாளர் சாரு நிவேதிதா உள்ளிட்டோரால் விமர்சனம் செய்யப்பட்டது. அடுத்ததாக அவர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் - காளமாடன் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
தனுஷ் மீதுதான் மக்களுக்கு கோபமாம்.. வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்.. என்ன இப்படி பேசிட்டாரு?
மாரி செல்வராஜ் பேச்சு: இந்நிலையில் வாழை படத்தை இயக்கியதற்காக அவருக்கு தனியார் யூடியூப் சேனல் சார்பில் விருது ஒன்று வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு வாழை படத்தில் நடித்திருந்த இரண்டு சிறுவர்களான பொன்வேல் மற்றும் ராகுலும் வந்திருந்தனர். விருதினை பெற்றுக்கொண்ட மாரி பேசுகையில், "வாழை படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்கள் இப்போது படிப்பில் கவனம் செலுத்திவருகிறார்கள். படிப்புதான் முக்கியம் என்று அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். வாழை படத்தின் மூலம் அவர்களுக்கு கிடைத்திருக்கும் வெளிச்சம் எனக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனெனில் அவர்கள் எந்தவொரு தவறு செய்தாலும் நான்தான் மாட்டிக்கொள்வேன். அவர்கள் தவறு செய்யாவிட்டாலும் அவர்களின் செயல்களை இச்சமூகம் தவறாக எடுத்துக்கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இவர்கள் எதை செய்தாலும் வாழை பட நடிகர்கள் என்றுதான் செய்திகள் வரும். எனவே எதை செய்தாலும் கவனமாக செய்யுங்கள்" என்றார்.