ARTICLE AD BOX
GBU Teaser: சம்பவம் லோடிங் மாமே.. தமிழ்நாட்டுக்கே பார்ட்டிதான்.. குட் பேட் அக்லி டீசர் ரிலீஸ் தேதி
சென்னை: அஜித் குமார், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அஜித் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் குட் பேட் அக்லி. பெரும் எதிர்பார்ப்பினை படம் அறிவிப்பில் இருந்து ஏற்படுத்தியுள்ள இந்த படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக இருந்து, விடாமுயற்சி படத்தால் ஏப்ரலுக்கு தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் படத்தின் புரோமோஷன்களை படக்குழு இப்போது இருந்தே ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே த்ரிஷாவின் லுக் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டீசர் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழுவே அதிகாரப்பூர்வமாக சிறப்பு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
