பார்த்தாலே சொக்க வைக்கும் இந்தியாவின் சின்னஞ் சிறு நகரங்கள்

3 hours ago
ARTICLE AD BOX

இந்தியாவில் பிரபலமான சுற்றுலா தலங்கள், கோவில் நகரங்கள், கடற்கரை நகரங்கள் என சுற்றி பார்க்க வேண்டிய நகரங்கள் எத்தனையோ உள்ளன. "மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது" என்பார்கள். அது போல் பரப்பளவில் மிகச் சிறியதாக இருந்தாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கவர்ந்து இழுத்து வரும் அழகான நகரங்கள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன. அப்படி அளவில் சிறியதாக இருக்கும் இந்தியாவின் டாப் 10 பிரபலமான சிறிய சுற்றுலா நகரங்களை பற்றிய தெரிந்து கொள்ளலாம்.

Ziro

ஜிரோ, அருணாச்சல் பிரதேசம்

அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள ஜிரோ மறக்க முடியாத ஒரு அருமையான சிறு நகரமாகும். பசும் புல்வெளிகள், வயல்கள், பனி போர்த்திய மலைகள் புடை சூழ உள்ள அழகிய நகரம் இது. அபடானி பழங்குடியினர் கலாச்சாரம் இங்கு பிரபலமாகும்.

மூணாறு

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள எழில் மிக்க நகரம் தான் மூணாறு. தேயிலைத் தோட்டங்கள், பனி போர்த்திய மலைச் சிகரங்கள், ஜில் ஜில் சீதோஷ்ணத்துடன் கூடிய மூணாறு அழகான அற்புதமான அனுபவம் தரும் நகரம் ஆகும்.

சம்பா, ஹிமாச்சல் பிரதேசம்

பழமையான கோவில்கள், இமயமலை, இயற்கையின் பேரழகு என பார்க்கவே படு ரம்மியமாக காட்சி தரும் ஊர் தான் இந்த சம்பா.

மாவிலனாங், மேகாலயா

மேகங்கள் தொட்டுத் தழுவிச் செல்லும் அழகிய மேகாலயாவில் உள்ள மிக மிக அழகான ஊர்தான் இந்த மாவிலனாங். ஆசியாவிலேயே மிகவும் சுத்தமான கிராமம் என்று பெயர் பெற்றது இது. இங்கு மூங்கில் வீடுகள் பிரபலம். பசும் புல்வெளிகள், செடி கொடிகள், ஆறுகள் என ஊரே படு க்யூட்டாக காணப்படுகிறது.

Tawang

தவாங், அருணாச்சல் பிரதேசம்

பனி போர்த்திய உயர்ந்த சிகரங்களுக்கு நடுவே உள்ள அழகிய ஊர் தான் தவாங். புத்த மதாலயங்கள் நிறைந்த நகரம். இமயமலையின் தாலாட்டில் சொக்க வைக்கும் சொர்க்கபுரி இந்த தவாங்.

காஸா, ஹிமாச்சல் பிரதேசம்

ஸ்பிடி பள்ளத்தாக்கின் இதயம் என காஸாவை கூறலாம். சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்கபுரி இது. அருமையான மலைகளுக்கு மத்தியில் உள்ள அழகிய ஊராகும் இது.

கோகர்ணா, கர்நாடகா

கர்நாடகத்தின் அழகிய கடலோர நகரம் இது . அருமையான பழமையான கோவில்கள், அழகிய கடற்கரை நிறைந்த ஊர் இது. கோவாவுக்கு மாற்றாக இதைக் கூறுவார்கள்.

கஜ்ஜியார், ஹிமாச்சல் பிரதேசம்

இந்தியாவின் மினி ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படுவது கஜ்ஜியார். அழகிய புல்வெளிகள், தியோடர் காடுகள், ஏரி என்று கண்ணுக்கு விருந்தளிக்கும் அழகிய நகரம் இது.

மண்டு, மத்தியப் பிரதேசம்

ஆப்கானிஸ்தான் நாட்டு கட்டடக் கலையுடன் கட்டடங்கள் நிறைந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரம் இது. அழிந்து போயிருந்தாலும் கூட அந்த அழகான கட்டடக் கலையை வெளிப்படுத்தியபடி நிற்கும் பிரம்மாண்ட மாளிகை மனதைக் கொள்ளை கொள்ளும். இங்கிருந்து நர்மதா பள்ளத்தாக்கைப் பார்த்தால் மனசெல்லாம் அத்தனை சந்தோஷம் நிரம்பித் தழும்பும்.

அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப் பிரதேசம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள அரக்கு பள்ளத்தாக்கு, பழங்குடியினர் கலாச்சாரத்தின் அருமையை விளக்கும் ஒரு இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. காபித் தோட்டங்கள், நீர் வீழ்ச்சிகள் நிறைந்த இயற்கைத் தாயின் வரம் பெற்ற பகுதி இது.

Read more about: arunachal pradesh
Read Entire Article