உண்மை சம்பவம் படமாகிறது

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை: எம்.என்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் எம். நாகரத்தினம் தயாரித்திருக்கும் திரைப்படம் வள்ளி மலை வேலன். இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார் எஸ்.மோகன், வசனம் சேத்து மற்றும் ராஜாமணி. ஒளிப்பதிவு, மணிகண்டன். இசை, ஏகே ஆல்ரின்.இப்படத்தில் நாயகனாக புதுமுகம் எம். நாகரத்தினம் நடிக்க, நாயகியாக இலக்கியா நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை, காவிரி மகிமா, கணபதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தைப் பற்றி இயக்குனர் மோகன் கூறுகையில், ‘இப்படம் முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படம் வள்ளி மலையை சுற்றிய கிராமங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது’ என்றார்.

Read Entire Article