20 ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் நடிக்கும் பணக்கார நடிகர்! யார் தெரியுமா?

2 hours ago
ARTICLE AD BOX

Famous Actor Acting Without Salary For 20 Years : ஒரு திரைப்படம் உருவாகிறது என்றால், அதில் வேலை பார்ப்பவர்களில் ஹீரோவிற்குதான் அதிக சம்பளம் வழங்கப்படும். அதுவும், இந்தியா போன்று, சினிமாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் நாடுகளில் நடிகர்கள் படங்களில் சம்பளம் வாங்குவதோடு, தாங்கள் நடிக்கும் விளம்பரங்கள், கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் காசு வாங்குவர். ஆனால், இங்கு ஒரு நடிகர் தான் நடிக்கும் படங்களுக்காக சம்பளம் வாங்குவதில்லை, அதற்கு மாறாக படங்களின் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை பெற்று விடுகிறார். அந்த நடிகர் யார் தெரியுமா?

பாலிவுட் ஸ்டார்:

இந்தி திரையுலகான பாலிவுட்டில், சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கான் என மூன்று பெரிய கான்கள் இருக்கின்றனர். இதில், ஷாருக்கும் சல்மானும் தாங்கள் நடிக்கும் படங்களுக்காக முன்கூட்டியே தொகையை அட்வான்ஸ் மற்றும் சம்பளமாக பெற்று கால்ஷீட் கொடுத்து நடித்து வருகின்றனர்.

ஆனால், அமீர்கான் இவர்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டவராக இருக்கிறார். இவர் சமீபத்தில் தான் சம்பளம் வாங்காமல் நடிப்பது குறித்து பேசியிருப்பது, வைரலாகி வருகிறது.

சம்பளத்திற்கு பதிலாக பெறும் தொகை..

நடிகர் அமீர்கான், கடந்த 20 ஆண்டுகளாக தான் நடிக்கும் படங்களுக்கு முன்தொகை, சம்பளம் என எதுவும் பெறுவதில்லை. படம் வெளியாகி, அதில் வரும் லாபத்தில் இருந்து ஒரு பங்கை பெற்று கொள்வாராம். 

இது குறித்து பேசியிருக்கும் அவர், “கடந்த 20 வருடங்களில் நான் நடித்த படங்களுக்காக சம்பளம் வாங்கவில்லை. ஆனால், படம் திரைக்கு வந்து, அது லாபம் ஈட்டிய பின்பு ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை பெற்றுக்கொள்வேன், அதற்கு முன்பு ஒரு ரூபாய் கூட வாங்குவதில்லை. அட்வான்ஸ் என்றும் எதுவும் பெருவதில்லை.  ரசிகர்களுக்கு படத்தை பிடித்திருந்தால் மட்டுமே எனக்கு காசு. அப்படி இல்லை என்றால், எனக்கும் அது நஷ்டம்தான்” என்று கூறியிருக்கிறார். இந்த தகவல் பலரை ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஜினியுடன் நடிக்கிறாரா?

தமிழில் சூர்யா எப்படியோ அது போல பாலிவுட்டில் இருக்கும் நட்சத்திரம் அமீர்கான். சமூக நலனுக்காக பாடுபடும் இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இது சம்பந்தமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இப்பாேதும், அதே சமூக அக்கறை கொண்ட கதைகளைத்தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

Aamir Khan

இந்தியில் வெளியான கஜினி, தூம் 3, 3 இடியட்ஸ், தங்கல் உள்ளிட்டவை இவர் நடிப்பில் உருவாகி ஹிட் ஆன படங்களாகும். தற்போது தமிழ் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படம், கூலி. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உப்பேந்திரா, செளபின் சாஹிர், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடிக்கின்றனர். இதில், அமீர் கானும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து படக்குழு தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

ட்ரெண்டை ஆரம்பித்தவர் யார்?

நடிகர்களை பொறுத்தவரை, அவர்களின் சம்பள விவரம் மற்றும் பிற பேமண்டுகள் குறித்த விவரம் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகிறது. ஆனால், ஒரு சில நடிகர்கள் தாங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது குறித்து ஓபனாக இருந்தனர். அவர்களில் ஒருவர் பாலிவுட் நட்சத்திரம் ராஜேஷ் கண்ணா. இந்திய திரையுலகின் பெரும் நட்சத்திரங்களுள் ஒருவரான இவருக்கு கோடான கோடி ரசிகர்கள் இருந்தனர். இவர் நடித்த படங்கள் பல ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருக்கின்றன.

படத்தில் நடித்து சம்பளம் பெறுவதற்கு பதிலாக, படத்தின் லாபத்தில தொகையை நடிகர்கள் பெறும் ட்ரெண்டை ஆரம்பித்தவர், ராஜேஷ் கண்ணாதான். இவர், 1971ஆம் ஆண்டில் நடித்த ஆனந்த் என்ற படத்திற்காக சம்பளத்தை பெறாமல், படத்தின் லாபத்தில் இருந்து ஒரு தொகையை பெற்றுக்கொண்டாராம். இது, அவருக்கு பேசப்பட்ட சம்பள தொகையை விட 10 மடங்கு அதிகம் எனக்கூறப்படுகிறது.

மேலும் படிக்க | மாமியாராக நடித்தவரையே திருமணம் செய்த பிரபல நடிகர்! யாரு ராசா நீ..?

மேலும் படிக்க | கார்த்தியின் படத்தில் குழந்தையாக நடித்தவர்-இப்போ அவருக்கே ஜோடி! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article