‘இந்தியன்-3’ படம் இழந்ததை மீட்டுக் கொடுக்கும்: ஷங்கர் நம்பிக்கை..

3 hours ago
ARTICLE AD BOX
lyca opted out from indian 3 movie

தோல்வியும் வெற்றியும் கலந்ததே வாழ்க்கை. தோல்வியில் பாடம் கற்றோர் வெற்றியில் அதிகம் மிதக்க மாட்டார்கள். அவ்வகையில், ‘இந்தியன்-3’ படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

‘இந்தியன்’ திரைப்படம் மெகா ஹிட் என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து, பல வருடங்களுக்கு பிறகு உருவான ‘இந்தியன்-2’ தோல்வியை சந்தித்தது.

பின்னர், ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸானது. இப்படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால், ‘இந்தியன்-3’ படத்திற்கான எதிர்பார்ப்பு வற்றியது. ஆனால், ‘இந்தியன்-2’ படப்பிடிப்பின்போது ‘இந்தியன்-3’ பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் ஷங்கர்.

இப்படத்திற்கான ஒரு பாடல் காட்சியை மட்டும் படமாக்க வேண்டியிருந்தது. அப்பாடலை சுமார் 20 கோடியில் படமாக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில், இந்தியன் 2 படம், எடுத்து முடிக்கும் முன்னரே லைகா நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு இருவரும் கோர்ட் படியேறிய நிகழ்வுகளும் அரங்கேறின. பின்னர் ரெட் ஜெயண்ட் வந்த பிறகு, ஷூட்டிங் முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

தற்போது, இந்தியன்-2 தோல்வியால் இந்தியன்-3 படத்துக்காக மேலும் செலவிட, லைகா மறுத்துவிட்டது. இதனால், அப்படத்தை மீண்டும் ரெட் ஜெயண்ட் கையிலெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, ஷங்கரிடம் பேசி பாடல் காட்சியே இல்லாமல் ‘இந்தியன்-3’ படத்தின் பேட்ச் ஒர்க்கை மட்டும் முடித்து ரிலீஸ் செய்யுமாறு கூறப்பட்டு உள்ளது.

இந்தியன்-2 புரமோஷனின் போதே, ‘தனக்கு இந்த படத்தை விட ‘இந்தியன்-3’ பாகம் தான் பிடிக்கும் என கமல்ஹாசன் கூறியிருந்தார். அதனால், இந்தியன்-2 படத்தில் இழந்ததை, இந்தியன்-3 படம் மீட்டுக் கொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்..!

lyca opted out from indian 3 movielyca opted out from indian 3 movie

The post ‘இந்தியன்-3’ படம் இழந்ததை மீட்டுக் கொடுக்கும்: ஷங்கர் நம்பிக்கை.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article