இந்தியாவை சுற்றி குறுகிய கால பயணத்தில், குறைந்த செலவில் சென்று பார்த்து விட்டு வருவதற்கும், அழகாக விடுமுறை கழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்தியாவை சுற்றி இருக்கும் இந்த நாடுகளுக்கு சென்று வரலாம். இந்தியாவை சுற்றி இத்தனை அழகான நாடுகளா என ஆச்சரியப்படும் அளவிற்கு அற்புத அனுபவங்களை தரும் மிக முக்கியமான 10 நாடுகள் பற்றி வாங்க தெரிந்த கொள்ளலாம்.

நேபாளம்
எவரெஸ்ட் சிகரத்தின் தாயகமான நேபாளம் டிரெக்கிங் செய்பவர்களுக்கும், ஆன்மீகத்தை நாடுபவர்களுக்கும் ஒரு சிறந்த இடமாகும். நேபாளத்தில் பார்க்க வேண்டிய சிறந்த சுற்றுலா இடங்கள் சாராங்கோட், எவரெஸ்ட் சிகரம், பகதூர் தர்பார் சதுக்கம், கோபன் மடாலயம், சித்வான் தேசிய பூங்கா போன்றவை ஆகும்.
பங்களாதேஷ்
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் என்று அழைக்கப்படும் பங்களாதேஷ். இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைப் போன்று இந்நாட்டிலும் வங்காள மொழியே பேசப்படுகிறது. வங்கதேசத்தில் அதிகம் பார்வையிடப்படும் இடங்களாக மைல்கள் நீளமான தங்கமணல், உயர்ந்த பாறைகள், அரிய சங்கு ஓடுகள், வண்ணமயமான பகோடாக்கள், புத்த கோயில்கள் உள்ளன. சுவையான கடல் உணவுகளுக்கு இது பெயர் பெற்ற நாடாகும்.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் இது அதன் ஆழமான கலாச்சார உறவுகள், முகாலாய கால நினைவுச் சின்னங்கள் மற்றும் அழகான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றது. பாகிஸ்தானில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் ஹன்சா பள்ளத்தாக்கு, அட்டாபாத் ஏரி, நரான் ககன், இஸ்லாமாபாத் சுற்றுலா தலம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க மொஹெஞ்சதாரோ போன்றவை ஆகும்.

இலங்கை
இந்தியாவின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு இலங்கை. இங்கு அழகான கடற்கரைகள், பழங்கால கோயில்கள் மற்றும் பசுமையான நிலப்பரப்புகள் அதிகம் உள்ளன. இலங்கையில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத்தலங்கள் சிகிரியா, சிங்கப்பாறை, கண்டி, யால தேசிய பூங்கா, பொலன்னறுவை போன்றவை ஆகும்.
சீனா
கிழக்கு ஆசியாவில் உள்ள மிகப்பெரிய நாடு சீனா. 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் இந்தியாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். இங்குள்ள சில முக்கியமான சுற்றுலா தலங்கள் தடை செய்யப்பட்ட நகரம். சீனப்பெருஞ்சுவர், கோடைக்கால அரண்மனை, பண்ட், பொட்டாலா அரண்மனை போன்றவை இங்கு பார்க்க வேண்டிய இடங்களாகும்.
மியான்மர்
ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நாடான மியான்மர் பண்டைய காலத்தில் பர்மா என்று அழைக்கப்பட்டது. மியான்மர் அதன் அழகான கடற்கரைகள், ஆயிரக்கணக்கான புத்த கோயில்கள், நன்னீர் டால்பின்கள், ரத்தின கற்கள் மற்றும் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு பிரபலமானது. வித்தியாசமான உணவுகளுக்கும் பெயர் பெற்ற நாடாகும்.
தாய்லாந்து
தாய்லாந்து, ஒரு தென் கிழக்கு ஆசிய நாடு. இது வெப்ப மண்டல கடற்கரைகள் செழிப்பான அரண்மனைகள் கொண்டது. தாய்லாந்தின் தலைநகரம் பாங்காக், அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள், மடங்கள் மற்றும் கோயில்களுக்குப் பிரபலமானது.புத்தரின் உருவங்களை காட்டும் அலங்கரிக்கப்பட்ட கோயில்களுக்கு பெயர் பெற்றது.

பூட்டான்
இமயமலையின் கிழக்கே உள்ள ஒரு புத்த நாடான பூட்டன் அங்குள்ள மடாலயங்கள், கோட்டைகள் மற்றும் செங்குத்தான மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள், பசுமையான நிலப்பரப்பிற்கு பெயர் பெற்றது. பூட்டானில் உள்ள பிரபலமான இடம் தக்த். இது ஒரு உயரமான பாறையின் ஓரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு புனிதமான புத்த தலம் ஆகும்.
மாலத்தீவு
மாலத்தீவு இந்திய பெருங்கடலில் உள்ள சிறிய தீவுகளால் ஆன தீவு நாடு ஆகும். மாலத்தீவு சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் ஒன்றாகும். இங்குள்ள இடங்களில் ஒன்றான ரெயின்போ ரீஃப் என்றும் அழைக்கப்படும் ஹெச்பி ரீஃப் , மாலத்தீவு சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பார்வையிடப்படும் ஒரு அழகிய கடற்பரப்புடன் கூடிய கண் கவர் டைவிங் இடமாகும்.
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் கரடு முரடான நிலப்பரப்புகளுக்கும், வரலாற்று சிறப்புமிக்க தலங்கள், மசூதிகளுக்கு பெயர் பெற்றது. இங்குள்ள சில வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பாமியின் புத்தர், பாபர் தோட்டம், தாருல் அமன் அரண்மனை போன்றவை ஆகும்.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet