ARTICLE AD BOX

சும்மா சொல்லக்கூடாது. எல்லாரும் ஏ படம் எடுப்பாங்க. ஆனா இது வேற லெவல்தான். பெருசு படத்துல அப்படி என்ன இயக்குனர் இளங்கோ ராம் பெருசா செஞ்சிட்டாருன்னுதானே கேட்குறீங்க. அது வெறும் பெருசா இருந்தா பரவாயில்ல. இம்மாம்பெருசுன்னு சொல்வாங்களே அதுதான். அந்த ஒரு லைனைக் கையில் எடுத்துக் கொண்டு இவ்ளோ பெரிய ஹிட்டைக் கொடுத்துருக்காரு. அவ்ளோதான்.
கடந்த மார்ச் 14ல் வெளியான படங்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெருசு படம் சக்கை போடு போட்டு வருகிறது. இது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது. ஊருல சபலபுத்தி கொண்ட ஒரு பெருசு அந்த நிலையில் இருக்கும்போது இறந்து போகிறார். அப்புறம் அதை குடும்பத்தினர் எப்படி எப்படி எல்லாம் மறைக்கிறார்கள். கடைசியில் எப்படி அடக்கம் செய்கிறார்கள் என்பதுதான் கதை.
படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்தாலும் கூட துளியும் விரசம் இல்லாமல் எடுத்திருக்கிறார் இயக்குனர் இளங்கோ ராம். குறும்படமாக எடுக்க வேண்டிய விஷயத்தை இவர் முழுக்க கலகலப்பான முழுநீளப் படமாக எடுத்து இருக்கிறார். பெண்களும், குடும்பத்தினரும் பார்க்கும் வகையில் படம் எடுக்கப்பட்டு இருப்பதுதான் படத்தின் தனிச்சிறப்பு.

படத்தில் வைபவ் அவரது அண்ணன் சுனில் உடன் இணைந்து நடித்துள்ளார். இருவரும் பேசும் காமெடி டயலாக்குகள் சூப்பர். பால சரவணன், விடிவி கணேஷ், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, முனீஷ்காந்த், தீபா ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
படத்தின் சில சென்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களின் மனதை வருடுகிறது. அந்த வகையில் படத்தில் காமெடி மட்டும் இல்லாமல் எமோஷனலாகவும் உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் இதை சிறந்த ஃபீல் குட் படம் என்று சொல்கிறார்கள். அவர்கள் சொன்னதுக்கு ஏற்ப படமும் வசூலில் முந்திக் கொண்டுள்ளது.௪ நாள் வசூல் விவரம் பாருங்க.
பெருசு படத்தின் முதல் நாள் இந்திய அளவில் கலெக்ஷன் 50 லட்சம். 2வது நாளில் 65 லட்சம். 3வது நாளில் 65 லட்சம். 4வது நாளில் 13லட்சம். ஆக மொத்தம் 1.93 கோடி. உலகளவில் 2.24 கோடி. பத்துக்கு பாக்ஸ் ஆபீஸ்ல 7.5ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.