ARTICLE AD BOX

ஈஸ்வரியின் பேச்சுக்கு பாக்யா பதிலடி கொடுத்துள்ளார்.

BaakiyaLakshmi Serial Episode Update 19-03-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி இனியாவிற்கு நாளைக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் என்று முடிவு எடுக்க பாக்யா எனக்கு இதுல விருப்பம் கிடையாது அவங்க கிட்ட போன் பண்ணி எதுவும் நடக்காதுன்னு சொல்லுங்க என்று சொல்ல இதுக்கு சொல்லணும் என்று கேட்கிறார். உடனே பாக்யா யாரோ முன்ன பின்ன தெரியாதவங்களுக்கு என் பொண்ண கட்டி கொடுக்கறதுல்ல எனக்கு விருப்பம் கிடையாது அதுவும் இல்லாம எல்லாம் வயசுல வர பிரச்சனை தான் அதுக்கு நம்ம என்ன பண்ணனும் பண்ண கூடாதுன்னு சொன்னா அவங்க புரிஞ்சிப்பாங்க அவளுக்கு இப்போ கல்யாணம் தேவையில்லை என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் எழில் தப்பு பண்ணா கல்யாணம் பண்ணி வச்சிருக்கான்னு அந்த காலம் பாட்டி இப்ப அப்படி எல்லாம் கிடையாது என்று சொல்ல வாங்க டைரக்டர் நீங்க எழுதுற கதையை உங்க படத்தோட வச்சுக்கோங்க என்று வாயை அடைகிறார் இது மட்டும் இல்லாமல் ஜெனி நீங்க பண்றது தப்பு பாட்டி என்று சொல்ல நேத்து எங்களுக்கு சப்போர்ட் பண்ண இன்னிக்கு உன் மாமியாருக்கு சப்போர்ட் பண்றேன் ஒரு பக்கமா இருக்க மாட்டியா என்று கேட்க இது வீடு தானே எந்த பக்கம் நியாயம் இருக்கோ நான் அதை தானே சொல்றேன் என்று சொல்லுகிறார். உடனே செழியனும் இப்போ இனியாவுக்கு கல்யாணம் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்ல பாட்டி பொறுமையா முடிவு பண்ணிக்கலாம் என்று சொல்ல பொறுமையா இருக்குற ஆளா இருந்தா எதுக்கு நீ ஆகாஷை போய் அடிச்ச என்று ஈஸ்வரி கேட்கிறார்.
எல்லோரும் முடிவில் விருப்பம் தெரிவிக்காததால் ஈஸ்வரி அமிர்தாவை பார்த்து நீ மட்டும் எதுக்கு எதுவும் பேசாம இருக்க நீயும் பேசு என்று சொல்லுகிறார். அமிர்தாவிற்கும் இதில் விருப்பம் இல்லை என்று சொல்ல, ஈஸ்வரி முடிவில் உறுதியாக இருக்கிறார். உடனே பாக்யா என் பொண்ணு விஷயத்துல தலையிடற வேலை வச்சுக்காதீங்க என்று கோபப்பட்டு இனியாவை அழைத்துக் கொண்டு சென்று விட மற்றவர்களும் சென்று விடுகின்றனர் உடனே ஈஸ்வரி கோபி இடம் நாளைக்கு பட்டுப் புடவெல்லாம் எடுக்க முடியாது அதனால இனியா கிட்ட இருக்க ஒரு நல்ல டிரஸ்ஸையே போட்டுக்கட்டும் என்று சொல்ல பாக்கியா உறுதியாக வேண்டான்னு சொல்லும்போது எப்படிம்மா என்று சொல்ல ஒன்னும் பண்ண முடியாது அவர் சமைக்க மாட்டா அதனால கிச்சன்ல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வந்துடு என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் ஈஸ்வரி ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்க கோபி இனியவை அழைத்து வருகிறார் ஈஸ்வரி கோபியிடம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து போன் பண்ணி இருந்தாங்க இனியாவை ரொம்ப புடிச்சிருச்சான் என்று சொல்லுகிறார். இனியா எதுக்கு பாட்டி திடீர்னு வந்தாங்க நிச்சயம் கல்யாணம் எல்லாம் பேசுறீங்க எனக்கு பயமா இருக்கு என்று சொல்ல இதில் பயப்பட என்ன இருக்கு இனியா என்று ஈஸ்வரி எமோஷனலாக பேசுகிறார் ஏற்கனவே உங்க தாத்தா போய் சேர்ந்துட்டாரு கூடிய சீக்கிரம் நானும் போய் சேர்ந்திடுவேன் என் பையன் கோபியும் ஏற்கனவே ஒருவாட்டி செத்துப் பிழைத்து இருக்கா உங்க அம்மா அவனை வீட்டை விட்டு வெளியே போனு சொல்லிக்கிட்டு இருக்கா உங்களால அவனுக்கு மாத்தி மாத்தி பிரச்சனை அவனுக்கு இன்னொரு வாட்டி ஹார்ட் அட்டாக் வந்தா அவனும் செத்து போயிடுவான் என்றெல்லாம் எமோஷனலாக பேசி இனியாவை திருமணத்திற்கு நீ சம்மதிக்கணும் என்று சொல்ல அதற்கு இனியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
பாக்கியாவிடம் வந்து அதுவும் மேல் நான் ஒரு தப்பு பண்ணேன் அது புரிஞ்சுகிட்ட இதுக்கு மேல அந்த தப்பு பண்ண மாட்டேன்னு சொல்ற அதோட விட்டு இருக்கலாமே எதுக்கு மாப்பிள்ளை பார்க்கிறது கல்யாணம் எல்லாம் எனக்கு ரொம்ப பயமா இருக்குமா என்று அழ அது மட்டும் இல்லாம டேடியும் பாட்டியும் ஒரே மாதிரி யோசிக்கிறாங்க என்று சொல்லி அழுது கொண்டே இருக்க பாக்யா தண்ணீர் குடிக்க சொல்லுகிறார். நீ எனக்கு பண்ணி கொடுத்த சத்தியத்துல உறுதியா இருக்கியா என்ன என்று கேட்க நிச்சயமாமா நான் உறுதியாக தான் இருக்கேன் உங்களுக்கு நல்ல பேரு வாங்கி கொடுக்கிற மாதிரி நான் நடந்து இருப்பேன் என்று சொல்ல அப்போ இந்த கல்யாண கல்யாண விஷயத்தை பத்தி நீ யோசிக்காத உன்னோட விருப்பம் இல்லாம இங்க எதுவுமே நடக்காது அதுக்கு நான் பொறுப்பு என்ன நம்பரல்ல என்று சொல்ல நம்பரமா என்று சொல்லுகிறார்.
மறுநாள் காலையில் செல்வி வீட்டிற்கு பாக்யா வர என்ன சொல்லுகிறார்? அதற்கு செல்வி பதில் என்ன? ஆகாஷ் என்ன கேட்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 19-03-25
The post எமோஷனல் பிளாக்மைல் பண்ணும் ஈஸ்வரி, பாக்கியா கொடுத்த ஷாக், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.