ARTICLE AD BOX
நான் மோசமானவனா? உள்நோக்கத்தோடு பரப்பப்படும் சர்ச்சை... பாடகர் உதித் நாராயணன் விளக்கம்!
சென்னை: பிரபல பின்னணி பாடகரான உதித் நாராயணன் நேரலையில் பாடிக்கொண்டிருந்த போது, பெண் ரசிகர்களின் உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் காட்டுத் தீ போல பரவியது. பாடகரின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில், இது உள்நோக்கத்தோடு பரப்பப்படும் வதந்தி என்று பாடகர் உதித் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், ஒடியா, நேபாளி, போஜ்புரி என பல மொழிகளில் பாடி பல விருதுகளை பெற்று இருக்கும் பாடகர் உதித் நாராயண், மேடை நிகழ்ச்சி பாடிக்கொண்டிருந்தார். அப்போது, அவரின் தீவிர ரசிகர்கள், அவருடன் செல்ஃபி எடுக்க மேடை வந்தனர். அப்போது, பெண் ரசிகர் ஒருவர் செல்ஃபி
எடுத்துவிட்டு, பாடகர் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். அப்போது, பாடகர், அந்தப் பெண்ணில் உதட்டில் முத்தம் கொடுத்தார். அந்த ஒரு ரசிகை மட்டுமில்லாமல், மற்றொரு பெண்ணின் உதட்டிலும் முத்தம் கொடுத்தார். இதை கூட்டத்தில் இருந்தவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
ரசிகைக்கு முத்தம்: இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரும், பாடகர் உதித் நாராயணனை திட்டித் தீர்த்தனர். அந்தஸ்துள்ள ஒரு பாடகர் பொதுவில் இப்படியா அசிங்கமாக நடந்து கொள்வது, அவர் தனது பொருப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்றும், அவரின் இந்த செயல் நமது கலாச்சாரத்தை அழித்துவிடும் என்று பலரும் அவரை விமர்சித்தனர். அதேபோல சிலர், அவர் யாரையும் கட்டாயப்படுத்தி கொடுக்கவில்லை. ரசிகர்கள் அவர் மீது இருந்த அன்பால் தான் அவரிடம் வந்தார்கள். கடைசியா வந்த பெண், அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்த்த பிறகு அவர் அருகில் வந்தார் என சிலர் பாடகருக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
எந்த உள்நோக்கமும் இல்லை: இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பாடகர் உதித் நாராயணன், அந்த நிகழ்ச்சி நடந்த இடத்தில் நிறைய பேர் இருந்தார்கள். அங்கு என்னுடைய பாதுகாவலர்களும் இருந்தார்கள். இருந்த போதும், ரசிகர்கள் அவர்களின் கைகளை குலுக்குவதற்காக நீட்டுகிறார்கள், சிலர் கைகளை முத்தமிடுகிறார்கள். இது ஏதோ உள்நோக்கத்தோடு நடந்தாக சிலர் விமர்சித்து, இந்த பாடகர் மோசமானவன் என்று இணையத்தில் திட்டுகிறார்கள். எங்கள் குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் மேடையில் பாடும் போது, ரசிகர்கள் என்னை விரும்புகிறார்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.