தான் படித்த பள்ளியில், மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தல்..

3 hours ago
ARTICLE AD BOX
sivakarthikeyan speech to students life and future

‘உடன் உள்ளவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும்’ என எஸ்கே கூறியுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்..

மாஸ் ஹீரோவாக உருவாகியுள்ள சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், திருச்சியில் தான் பயின்ற பள்ளிக்கூட நிகழ்ச்சி விழாவில் கலந்துகொண்டு பேசுகையில்,

‘இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை நான் பயின்றேன். இன்று நான் நடிகர், சிறப்பு விருந்தினர் என இருக்கலாம். அதையெல்லாம் தாண்டி நான் இந்த பள்ளியில் படித்து வளர்ந்துள்ளேன் என்பது பெருமையாக உள்ளது.

இந்தப் பள்ளியை என்றும் மறக்க மாட்டேன். இப்பொழுது மாணவர்களுக்கு பெற்றோர், சோசியல்மீடியா என்ற பிரஷர் இருக்கும். பள்ளி வாழ்க்கையை மிஸ் பண்ணாதீங்க. நல்லா படிங்க.

எனக்கு ஒரு படம் ஹிட்டாகிற சந்தோஷத்தை விட ஒரு சதவீத அதிக சந்தோஷம், இந்த பள்ளிக்கு வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், உடன் உள்ளவர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும்’ என்றார்.

sivakarthikeyan speech to students life and futuresivakarthikeyan speech to students life and future

The post தான் படித்த பள்ளியில், மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தல்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article