ARTICLE AD BOX
Published : 02 Feb 2025 01:22 AM
Last Updated : 02 Feb 2025 01:22 AM
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர் பிரமிடுகள்
<?php // } ?>உதகை: சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பிரமிடு வடிவில் சிறப்பு மலர் அலங்காரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுகிறது. அப்போது கண்காட்சிகள், சிறப்பு மலர் அலங்காரங்கள் இடம்பெறுவது வழக்கம். இதனால் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு அதிக அளவில் வருகின்றனர்.
இவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள். அங்கு பழமையான மரங்கள், கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம், ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, இலை பூங்கா, பெரிய புல்வெளி மைதானம், மலர் மாடம், அலங்கார வேலிகள் போன்ற இடங்களில் பல வண்ண மலர்களை கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்வார்கள்.
இந்நிலையில், கோடை சீசனை முன்னிட்டு பராமரிப்புப் பணிகளுக்காக பெரிய புல்வெளி மைதானம் மூடப்பட்டுள்ளது. மேலும், மலர் அலங்காரங்கள் இல்லாததால் தற்போது வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. எனவே, சென்னை மலர் கண்காட்சிக்காக தயாரிக்கப்பட்டு, மீதமிந்த மலர்த் தொட்டிகளை வைத்து தாவரவியல் பூங்காவில் பிரமிடு உட்பட சிறப்பு அலங்காரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறும் போது, "பூங்காவில் இரண்டு இடத்தில் 900 தொட்டிகளில் பிரமிடு செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. மேலும், மலர் மாடத்தில் பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு பூக்கள் பூத்துள்ளன. அவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்" என்றனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- தனிநபர்களின் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும்போது உயிரிழந்தால் உரிமையாளரே இழப்பீடு தரவேண்டும்
- மத்திய பட்ஜெட்: பொதுமக்கள் கருத்து | ஆதரவும், எதிர்ப்பும்
- மத்திய பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளது: புதுச்சேரி முதல்வர் பாராட்டு
- வயதான பெண்மணிக்கு புதிய முறையில் இதய அறுவை சிகிச்சை: கிண்டி அரசு மருத்துவமனை சாதனை