ARTICLE AD BOX
‘தல’ அஜித் கார் ரேஸில் மட்டுமல்ல, குக்கிங்கிலும் செம கிங்கு தான் என்கிறார் மகிழ். அதாவது…
‘தல’ அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான ‘விடாமுயற்சி’ படம் வருகிற 6-ந்தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் மகிழ் திருமேனி கடந்த சில நாட்களாக விடாமுயற்சி புரொமோஷனில் தீவிரமாக இறங்கியுள்ளார். அவர் பேசும் விஷயங்கள் படத்தின் மீதான ஹைப்பை பல மடங்கு உயர்த்தி வருகின்றது.
இந்நிலையில், படம் துவங்கும்போதே, ஏகப்பட்ட நெகட்டிவிட்டி பரவும், அதற்கெல்லாம் தயாரா இருங்க’ என அஜித் சார் கூறினார். அதுபோல தான் நடந்தது என்றார் மகிழ் திருமேனி. இந்த நெகட்டிவிட்டி பற்றி படப்பிடிப்பில் அஜித்திடமே நான் கூறியிருந்தேன்.
ஆனால் அவர் கூலாக ‘நான் தான் ஏற்கனவே சொன்னேனே’ என்றார். முதலில் நானும் இந்த வதந்திகளால் அப்சட்டானேன். ஆனால், அதன் பிறகு இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார் மகிழ்.
அஜித், நடிப்பை தாண்டி எப்படி ரேஸிங்கில் ஆர்வம் காட்டுகின்றாரோ, அதுபோல சமையலிலும் ஆர்வம் காட்டி வருபவர் தான் அஜித். தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பில் அவ்வப்போது அஜித் அனைவருக்கும் சமைத்துக் கொடுப்பார். சமைத்துக் கொடுத்த உணவை, தானே பரிமாறுவார் அஜித்.
அவ்வகையில், விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தபோது, அஜித் தினமும் படக்குழுவிற்கு சமைத்து கொடுப்பார். அந்த குளிருக்கு அஜித் காரசாரமாக டேஸ்ட்டாக சமைத்துக் கொடுப்பது நன்றாக இருக்கும்.
பொதுவாக அஜித் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே தான் சமைப்பார். படப்பிடிப்பில் எப்போதும் அவர் சந்தோஷமாக தான் இருந்துள்ளார்’ என்றார் மகிழ் திருமேனி.
The post டேஸ்ட்டாக சமைத்து, தானே பரிமாறவும் செய்தார் அஜித்: மகிழ் திருமேனி நெகிழ்ச்சி.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.