நான் முழுசா படிக்காத புத்தகம் ‘என் அப்பா’..!! அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

3 hours ago
ARTICLE AD BOX

ஒரு நண்பனின் வாழ்வில்

 

மறக்க முடியாத நினைவுகள் 💐

 

அப்பாவின் அன்பையும் அக்கறையையும் நாம் உணர நீண்ட காலங்கள் எடுக்கின்றது.

 

82 வயதைக் கடந்து

எனக்காக காத்திருந்த என் அப்பா

நீ சாப்பிடுப்பா என்று மெல்லிய குரலில்

சொன்னது அப்பா..

 

நான் உன்னை பார்த்து விட்டேன்

இனிமேல் எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை… என்று சொல்லும் போது

கண்களில் கண்ணீர்..😭😭😭😭

 

தங்கியிருந்த தாயின் கருவறை

புனிதமானது அதே போல நாம்

விழும் போது தாங்கிக் கொண்ட

அப்பாவின் தோள்களும்

புனிதமானது.

 

பலரது வாழ்வில் கடைசி

வரை விளங்கிக்கொள்ள

முடியாத புத்தகம் அப்பா..!

 

தாங்கிப் பிடிக்க

அம்மாவும் தூக்கி

நிறுத்த அப்பாவும்

இருக்கும் வரை யாரும்

வீழ்ந்தது இல்லை.

 

பிள்ளைகள் கேட்கும்

பொருளை வாங்கிக்

கொடுப்பதில் தான்

அப்பாவின் சந்தோசம்

நிறைந்திருக்கின்றது.

 

குழந்தையாக இருந்த

பொழுது உன்னை இறுக

கட்டியணைத்த படி உன்

அரவணைப்பிலும்

பாதுகாப்பிலும் வாழ்ந்த

நாட்கள் மீண்டும் வராத

என்று என் இதயம்

ஏங்குகிறது அப்பா.

 

தன் தலைக்கு மேலே

உட்கார வைத்து நம்மை

அழகு பார்க்கும் அப்பாவை

நாம் ஒரு போதும் தலை குனிய

வைத்து விடக் கூடாது.

 

என்னை தூக்கி அணைக்க

முடியாமல் நீ தவித்த

தவிப்பை உன் கண்கள்

எனக்கு காட்டிக்

கொடுக்கிறது அப்பா.

 

நான் ரசித்த அழகிய

இசை என் அப்பாவின்

இதயத்துடிப்பு.

 

தன் மூச்சு உள்ள வரை

எனக்காக நேசிப்பவர்…

எனக்காக தான்

சுவாசிப்பவர் என்

அப்பா மட்டும்..!

 

அப்பா நமக்கு

என்னவெல்லாம் செய்தார்

என்பதை நாம் உணர்வதற்கு

வாழ்க்கையில் பல

வருடங்களை கடக்க

வேண்டி இருக்கின்றது.

 

அப்பாவை தவிர நமக்கு

நல்ல நடத்தையை

வாழ்க்கையில் வேறு

எந்த ஆசானாலும்

கற்பிக்க முடியாது.

 

அன்பை வார்த்தையில்

வெளிப்படுத்தாமல் தன்

உழைப்பு மூலம்

உணர்த்தும் ஒரே உறவு

அப்பா மட்டும் தான்.

 

தாய் நமக்காக

கஷ்டப்படுவதை நம்மால்

கண்டு பிடித்து விட முடியும்.

ஆனால் தந்தை நமக்காக

கஷ்டப்பட்டதை மற்றவர்கள்

சொல்லித் தான் பிற்காலத்தில்

தெரிய வரும்.

 

உண்மையாக உழைத்து

சொந்த காலில் நிற்கும்

பொழுது தான் புரிகிறது.

இத்தனை நாள் தன்

தோளில் சுமப்பதற்கு

எவ்வளவு வலிகளை

கடந்திருப்பார்

என்று “அப்பா”.

 

அம்மாவின் அன்பு கடல்

அலை போல வெளிபட்டுக்

கொண்டே இருக்கும்..

ஆனால் அப்பாவின் அன்பு

நடுக்க கடல் போன்றது

வெளியே தெரியாது

ஆனால் ஆழம் அதிகம்.

 

அப்பாவின் அன்பை

விட சிறந்த அன்பு இந்த

உலகில் எதுவும் கிடையாது.

 

கடவுளுக்கும் அப்பாவிற்கும்

சிறு வேறுபாடு தான்

கண்ணுக்கு தெரியாதவர்

கடவுள்.. கண்ணுக்கு

தெரிந்தும் பலராலும்

கடவுள் என புரிந்து

கொள்ளப்படாதவர்

“அப்பா”.

 

செதுக்கப்பட்ட ஒவ்வொரு

சிலையும் கடவுள் என்றால்

எனக்கு அப்பாவும் கடவுள்

தான். அடித்தாலும் அன்பால்

அணைக்கும் கடவுள் அப்பா.

 

சில நேரம் பல வலிகளை

மறக்க அப்பாவின்

வார்த்தைகள் மட்டும்

போதுமாக இருக்கின்றது.

 

நாம் தவறான பாதையில்

சென்றால் ஓடி வந்து

நம்மை தடுக்கும் முதலாவது

உறவு அப்பாவாக தான்

இருக்க முடியும்…!

 

இன்னொரு ஜென்மம் ஒன்று இருந்தால்

உங்களுக்கு மகனான பிறக்க வேண்டும்

நீங்கள் உயிரோடு இருக்கும் போதே…

தங்களின் ஆசை நிறைவேற்ற வேண்டும்…

 

நான் முழுசா படிக்காத புத்தகம்

என் அப்பா ❤

Read Entire Article