தம்பதியினர் உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?..

3 hours ago
ARTICLE AD BOX

♥உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் உடலுறவில் ஈடுபடுகிறது. திருமணமான ஒவ்வொரு கணவன், மனைவியும் தாம்பத்யம் என்று அழைக்கப்படும் உடலுறவில் ஈடுபடுகின்றனர்.
இந்த உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.

♥இந்நிலையில் தொடர்ச்சியாக உடலுறவில் ஈடுபட்டு வந்த தம்பதியினர் உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்தினாலோ அல்லது அதனை குறைத்து கொண்டாலோ மனரீதியாகவும்,உடல் ரீதியாகவும் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் என்னவெல்லாம் என்று தற்போது பார்க்கலாம்.

♥கவலை, மன_அழுத்தம் மற்றும் மன ஆரோக்கியம்:-
உளவியல் ரீதியாகவும் உங்கள் வாழ்க்கையில் செக்ஸ் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் துணையுடன் உடலுறவு கொள்வதை நிறுத்தியவுடன், நீங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு ஆளாக நேரிடும். டோபமைன் மற்றும் ஆக்ஸிடாஸின் போன்ற உணர்வு-நல்ல ஹார்மோன்களை செக்ஸ் வெளியிடுகிறது. உங்கள் கூட்டாளருடனான எந்த உடலுறவும் கொள்ளா பட்சத்தில் இந்த மாற்றங்கள் நிகழ்கிறது.

♥#நினைவாற்றால் :-
பெரும்பாலும் உடலுறவு கொண்டவர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருக்கும் என்று ஒரு சில ஆராய்ச்சிகள் கூறியுள்ளன.
அதே சமயம் உடலுறவில் ஈடுபடாதவர்களுக்கு அந்த அளவுக்கு நினைவாற்றல் இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.ஏனெனில் உடலுறவில் ஈடுபடும் போது அது உங்கள் மூளை நியூரான்களை வளர்க்கவும் சிறப்பாக செயல்படவும் உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

♥#நோய் எதிர்ப்பு:-
வழக்கமான உடலுறவு கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உடலுறவில் ஈடுபடுவோருக்கு சளி, இருமல் போன்ற நோய்கள் குறைவாகவே ஏற்படுகின்றன என்றும்.
வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு முறை உடலுறவில் ஈடுபடுவது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு குறிப்பிட்ட ஆன்டிபாடியின் அளவை அதிகரிப்பதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது.
இந்நிலையில் தொடர்ச்சியாக உடலுறவில் ஈடுபட்டவர்கள் அதனை நிறுத்தும் போது உடலில் நோயெதிர்ப்பு தன்மை குறையலாம் அதனால் பல்வேறு நோய்களும் தாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

♥#தடைபட்ட உறவு:-
நீங்கள் உடலுறவை நிறுத்திய ஒரு உறவில் இருந்தால், உங்களை அறியாமல் உங்கள் துணையை விட்டு மனரீதியாக வெகுதூரம் சென்றுவிடுவீர்கள் அவருடனான உறவில் மிக்பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுவிடும்
உண்மையில், சீரான இடைவெளியில் உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள் குறைந்தளவு உடலுறவு வைத்துக்கொள்பவர்களை விட மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Read Entire Article