சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 | ஷேன் வாட்சன் சதம் வீண்.. 217 ரன்களை சேஸ்செய்த லாராவின் WI!

2 hours ago
ARTICLE AD BOX
Published on: 
25 Feb 2025, 11:41 am

இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய ஆறு புகழ்பெற்ற கிரிக்கெட் நாடுகளின் முன்னாள் சாம்பியன் வீரர்களை ஒன்றிணைத்து சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) டி20 தொடர் நடத்தப்பட்டுவருகிறது.

International Masters League T20 2025 from starts feb 22
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்எக்ஸ் தளம்

இந்தியாவில் நடந்துவரும் இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலீஸ், குமார் சங்ககரா, இயன் மோர்கன், ஷேன் வாட்சன் முதலிய முன்னாள் வீரர்கள் அந்தந்த நாடுகளை கேப்டனாக வழிநடத்துகின்றனர்.

15 லீக் போட்டிகள், 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 18 போட்டிகள் நடத்தப்படும் இந்த தொடரானது பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கியது.

International Masters League T20 2025 from starts feb 22
International Masters Leagueஎக்ஸ் தளம்

முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா மாஸ்டர்ஸ் மற்றும் சங்கக்கரா தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் மோதிய நிலையில், இலங்கையை 4 ரன்னில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் இரண்டாவது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிகள் எதிர்த்து விளையாடின.

ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ்
மீண்டும் களத்தில் சச்சின், லாரா, ஜாக் காலீஸ்.. ஆரம்பமாகும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக்! முழு விவரம்!

சதம் விளாசிய ஷேன் வாட்சன்.. 217 ரன்னை சேஸ்செய்த விண்டீஸ்!

நவி மும்பையில் தொடங்கிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் கேப்டன் பிரையன் லாரா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதன்பேரில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 216 ரன்களை குவித்தது.

⚔️ 𝐓𝐡𝐞 𝐁𝐚𝐭𝐭𝐥𝐞 𝐁𝐞𝐠𝐢𝐧𝐬! 🤩🔥

Two Legendary Teams. One Epic Showdown! 🏏💥
West Indies Masters 🆚 Australia Masters - who are you backing? 🙌#IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex #WestIndiesMasters #AustraliaMasters pic.twitter.com/ITLXHclsN0

— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) February 24, 2025

தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் கேப்டன் ஷேன் வாட்சன், 52 பந்துகளில் 9 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டி 107 ரன்கள் குவித்து அசத்தினார். இது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரின் முதல் சதமாகும்.

𝑾𝒂𝒕𝒕𝒐 wasted no ⏱️👉 𝒇𝒊𝒓𝒔𝒕-𝒆𝒗𝒆𝒓 #IMLT20 century in just 4️⃣8️⃣ balls! 👏#TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/zk7NmnucdV

— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) February 24, 2025

இந்நிலையில் 217 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 19.2 ஓவரிலேயே 220 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது. அதிகபட்சமாக லேண்டி சிம்மன்ஸ் 94 ரன்களும், டிவெய்ன் ஸ்மித் 51 ரன்களும், பிரையன் லாரா 33 ரன்களும் குவித்தனர்.

𝐖𝐡𝐚𝐭. 𝐀. 𝐆𝐚𝐦𝐞! 🔥

A sensational run chase wraps up a dominant 7️⃣-wicket victory! #IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/DB3tka0Q2v

— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) February 24, 2025

இன்று நடைபெறவிருக்கும் மாஸ்டர்ஸ் லீக் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

𝐒𝐢𝐠𝐧𝐢𝐧𝐠 𝐨𝐟𝐟 𝐟𝐨𝐫 𝐭𝐨𝐝𝐚𝐲! 🤝#IMLT20 #TheBaapsOfCricket #IMLonJioHotstar #IMLonCineplex pic.twitter.com/L0Ll7XgY7Q

— INTERNATIONAL MASTERS LEAGUE (@imlt20official) February 24, 2025
ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் vs வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ்
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20| பிரையன் லாரா அணிக்கு எதிராக 48 பந்தில் சதம் விளாசிய வாட்சன்!
Read Entire Article