ARTICLE AD BOX
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி மற்றும் அன்பு காதலுக்கு துணையாக இருவர் வருகிறார்கள். அதேபோல் ஆட்டத்தை கலைக்க பார்வதி மித்ரா சதி திட்டம் தீட்டுகிறார்கள்.
அன்பு ஆனந்தி மகேஷ் என்ற முக்கோண காதல் கதைதான் சிங்கப்பெண்ணேவின் முழு கதையும். அன்பு மற்றும் ஆனந்தி காதலிப்பது மகேஷுக்கு தெரியாமல் இருக்கிறது. ஆனால் மகேஷ், ஆனந்தி மீதுள்ள காதலில் பலவற்றை தியாகம் செய்கிறார்.
ஒரு சின்ன வீட்டில் தங்க முடிவெடுக்கிறார். காதலுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்று மகேஷ் கூறினாலும், அந்த குட்டி வீட்டில் அவரால் இருக்க முடியவில்லை. மொட்டை மாடியில் மகேஷ் வெயிலில் படுத்திருக்கிறார். இவரின் இந்த கஷ்டங்களைப் பார்த்த அன்பு, மிகவும் வருத்தப்படுகிறார். உடனே ஆனந்திக்கு போன் பண்ணி இது பற்றி வருத்தமாக பேசுகிறான். ஆனால், மீண்டும் மகேஷ் வீட்டுக்கு திரும்பிவிட்டார்.
இதனால் ஆனந்தி, அன்பு தானும் காதலிப்பதாக மகேஷிடம் கூறிவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இதன் முதற்கட்டமாக வார்டனிடம் தன்னுடைய காதலைப் பற்றி கூறுகிறார்.
இது அவருக்கும் மிகவும் ஷாக் ஆகிறது. ஏனெனில் மகேஷுடன் ஆனந்தியை சேர்த்து வைக்க வார்டன் ப்ளான் செய்தார். ஆனால், இப்போது ஆனந்தியின் முடிவு அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், அவளின் உணர்வை மதிக்கிறார். மேலும் ஆனந்தி நானும் அன்புவும் காதலிப்பதை நீங்கள்தான் மகேஷிடம் கூற வேண்டும் என்று வார்டனிடம் கூறிவிடுகிறார்.
வார்டன் முயற்சி செய்து முடியவில்லை. தற்போது ஆனந்தி அன்பு காதலுக்கு உதவி செய்வதாக வேலு கூறினாலும், அவன் பேச்சை அழகப்பன் கேட்க வாய்ப்பே கிடையாது.
இதனையடுத்து இன்றைய ப்ரோமோவில், அன்பு அம்மா ஆனந்திக்கு போன் செய்து அனைத்தையும் கேட்கிறார். ஆனந்தியும் அனைத்து ஒன்றுவிடாமல் கூறிவிடுகிறார்.
அதே நேரத்தில் வார்டன் தில்லைநாதனுக்கு போன் பண்ணுகிறார். ஆனால் அந்த போனை மகேஷ் எடுத்து விடுவது போல் காட்டப்படுகிறது.
மற்றொரு பக்கம், அன்பு மற்றும் ஆனந்தி செவரக்கோட்டைக்கு போக இருப்பதை மித்ரா மகேஷின் அம்மா பார்வதியிடம் சொல்கிறார் உடனே பார்வதி சந்தோஷமான விஷயம் தானே என்று சொல்கிறார். ஆனால் மித்ரா அன்பு மற்றும் ஆனந்தி செவரக்கோட்டைக்கு சென்று திருமணத்தைப் பற்றி பேசக்கூடாது. அப்படி பேசினால், நம்முடைய ஆசை நிறைவேறாது என்று கூறுகிறார். இதனால், இருவரும் சேர்ந்து மீண்டும் ஏதோ ப்ளான் செய்கிறார்.