ARTICLE AD BOX
செவ்வாய் கிரகத்தில் புதையுண்ட 3 பில்லியன் ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிப்பு!
செய்தி முன்னோட்டம்
செவ்வாய் கிரகத்தில் புதைந்துள்ள 3 பில்லியன் ஆண்டுகள் பழமையான கடற்கரை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆய்வுகளின் தரவுகள் படி, 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில், கடல் மற்றும் கடற்கரையும் இருந்திருக்கக்கூடும் என்றும், கிட்டத்தட்ட பாதி கிரகத்தை அந்த கடல் மூடியிருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
முதன்முதலில், 1970களில் நடத்தப்பட்ட ஆய்வில், நாசாவின் மரைனர் 9 ஆர்பிட்டரிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் செவ்வாய் கிரகத்தில் நீர் செதுக்கப்பட்ட மேற்பரப்புகளை வெளிப்படுத்தின.
இது ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தின் மீது தண்ணீர் அலை அலையாக பரவியதா என்ற சர்ச்சைக்குரிய கேள்விக்கு தீர்வு கண்டது.
அப்போதிருந்து, நமது அண்டை கிரகத்தில் தண்ணீர் ஒரு காலத்தில் பெரும் பங்கு வகித்ததது என்பதற்கான சான்றுகள் மேலும் மேலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆய்வு
தொடர் ஆய்வுகளும், தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகளும்
உதாரணமாக, செவ்வாய் கிரக விண்கற்கள் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தண்ணீருக்கான ஆதாரங்களைப் பதிவு செய்கின்றன.
சமீபத்திய ஆய்வில், கடந்த சில ஆண்டுகளாக உருவான தாக்கப் பள்ளங்கள் இன்று மேற்பரப்பிற்கு அடியில் பனி இருப்பதைக் காட்டுகின்றன.
இதன் தொடர்ச்சியாக தற்போது தண்ணீர் எப்போது தோன்றியது, எவ்வளவு இருந்தது, எவ்வளவு காலம் நீடித்தது என்பது குறித்து ஆய்வுகள் செலுத்துகின்றன.
அந்த வகையில் இன்று PNASஇல் வெளியிடப்பட்ட இந்த புதிய ஆய்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் குவாங்சோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியான்ஹுய் லி தலைமையிலான சீன மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது.
கடற்கரை
புதிய ஆய்வு, கடற்கரை இருந்ததற்கான தடயங்களை வழங்குகிறது
புதிய ஆய்வின் தரவுகள், பில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு கடற்கரைக்கு அருகில் புதைக்கப்பட்ட பாறைகள் பற்றி விவாதிக்கிறது.
பண்டைய செவ்வாய் கிரகத்தில், பெருங்கடலில் இருந்து கடற்கரை படிவுகளைக் கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
செவ்வாய் கிரகத்தின் வடக்குப் பகுதியின் பெரும்பகுதியை உள்ளடக்கிய ஒரு பெரிய நீர்நிலை இருந்துள்ளது எனக்கூறுகிறது.
இந்த ஆய்வை சீன ரோவர் ஜூரோங் கண்டறிந்துள்ளது. இது 2020ஆம் ஆண்டு சீன தேசிய விண்வெளி நிர்வாகத்தால் ஏவப்பட்டது- 2021 முதல் 2022 வரை செவ்வாய் கிரகத்தில் செயலில் இருந்தது.
அதேபோல தற்போது நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் ஆராய்ந்து கொண்டிருக்கும் டெல்டா, சுமார் 45 கிமீ அகலமுள்ள ஜெஸெரோ தாக்கப் பள்ளத்திற்குள் அமைந்துள்ளது. இதுவும் ஒரு பழங்கால ஏரியின் தளமாக நம்பப்படுகிறது.
தொழில்நுட்பம்
தரையை ஊடுருவும் ரேடார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது
ஜூரோங் ரோவர் தரையை ஊடுருவும் ரேடார் எனப்படும் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தியது. இது மேற்பரப்பிலிருந்து 100 மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்தது.
பெறப்பட்ட தரவுகள் புதைக்கப்பட்ட பாறைகளின் பல பண்புகளை வெளிப்படுத்தியது.
குறுக்குவெட்டுப் பகுதியில் படம்பிடிக்கப்பட்ட பாறைகளில் பல பிரதிபலிப்பு அடுக்குகள் இருந்தன, அவை குறைந்தபட்சம் 30 மீட்டர் வரை தரையில் ஊடுருவி ரேடார் மூலம் தெரியும்.
இந்த வடிவியல் பூமியில் உள்ள கடல்களில் வண்டல்கள் எவ்வாறு படிவுகளாகப் படிகின்றன என்பதை சரியாக பிரதிபலிக்கிறது.
தரை ஊடுருவும் ரேடார், பாறைகள் ஒரு மின் புலத்தால் எவ்வளவு பாதிக்கப்படுகின்றன என்பதையும் அளவிடுகிறது.
முடிவுகள், பாறைகள் வண்டல் வடிவமாக இருப்பதற்கும், அவை எரிமலைப் பாய்வுகள் அல்ல என்பதை எடுத்துக்காட்டவும் அதிக வாய்ப்புள்ளது.