ARTICLE AD BOX
கோவையில் உள்ள ஜி.எஸ்.டி மற்றும் மத்திய கலால் வரி முதன்மை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள கேண்டீன் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
CANTEEN ATTENDANT
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 17.03.2025 அன்று 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: 18,000 – 56,900
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://gstchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.03.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.