நான் துணை கேப்டனாக தோனியிடம் எதாவது கூறினால் அவரது ரியாக்ஷன் இதுதான் - விராட் கோலி

18 hours ago
ARTICLE AD BOX

பெங்களூரு,

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய வீரருமான விராட் கோலி, மகேந்திரசிங் தோனிக்கு பிறகு கேப்டனாக பதவியேற்று அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். ஆனாலும் ஐ.சி.சி. தொடர்களில் கோப்பைகளை வெல்லாததால் கேப்டன் பதவியிலிருந்து விலகி தற்போது சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியில் மகேந்திரசிங் தோனி கேப்டனாக இருந்தபோது தான் துணை கேப்டனாக எவ்வாறு செயல்பட்டார்? என்பது குறித்தும், தோனியுடன் நடைபெறும் உரையாடல்கள் குறித்தும் சில சுவாரஸ்யமான தகவல்களை விராட் கோலி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்திய அணிக்காக தோனி கேப்டனாகவும், நான் துணை கேப்டனாகவும் இருந்தபோது ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு ஓவரின் போதுமே நான் அவரிடம் இருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டேன் .மேலும் ஒரு துணை கேப்டனாக நான் அவர் அருகே சென்று பீல்டரை எங்கு நிக்க வைக்கலாம்? எங்கு கேட்ச் வரும்? போட்டியை எப்படி வெல்லலாம்? என்று அவரிடம் ஏதாவது பேசினால் நான் கூறுவதை கேட்டுவிட்டு 'இது என்ன பைத்தியக்காரத்தனம் போல் உள்ளது", என்ற வகையில் வித்தியாசமான ரியாக்ஷன் காண்பித்து விட்டு சென்று விடுவார்' என கூறினார்.


Read Entire Article