நாதக மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலக முடிவு?

2 days ago
ARTICLE AD BOX

நா.த.க. மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் மாநில மகளிர் பாசறை செயலாளரான காளியம்மாளை கொசுறு என சீமான் விமர்சித்ததாக ஆடியோ வெளியானது. சீமான் விமர்சனத்தால் காளியம்மாள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்பட்டது. நா.த.க.வில் இருந்து விலகிய பலரும் காளியம்மாளை சீமான் விமர்சித்தததை பகிரங்கமாக கண்டித்திருந்தனர்.

இந்நிலையில் முழு மனதுடன் நா.த.க.வில் பயணிக்கிறீர்களா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க காளியம்மாள் மறுப்பு தெரிவித்துள்ளார். நா.த.க.வில் இருந்து விலகலா என்ற கேள்விக்கு எதுவாக இருந்தாலும் நானே அறிவிப்பேன் என கூறினார். காளியம்மாள் நேரடியாக பதிலளிக்க மறுத்துள்ளதன் மூலம் அவர் அதிருப்தியில் இருப்பது உறுதியானது. இதனிடையே அடுத்த மாதம் தூத்துக்குடி மணப்பாட்டில் நடைபெறும் உறவுகள் சங்கமம் எனும் நிகழ்வில் காளியம்மாள் சமூக செயற்பாட்டாளராக பங்கேற்கிறார்.

காளியம்மாள்; திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கும் நிகழ்வில் பங்கேற்க காளியம்மாள் ஒரே மேடையில் ஏறுகிறார். நாதக பொறுப்பை குறிப்பிடாமல் அழைப்பிதழ்களில் தனது பெயரை குறிப்பிடுமாறு காளியம்மாள் கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

The post நாதக மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலக முடிவு? appeared first on Dinakaran.

Read Entire Article