நாடு தாங்காது… திமுகவுடன் இணைந்து அதிமுக கொடியுடன் போராடத் தயார்- புகழேந்தி

4 days ago
ARTICLE AD BOX

”தமிழ் மொழிக்காக நாம் கட்சி பாகுபாடின்றி இணைந்து செயல்பட வேண்டும். அதிமுக கொடியுடன் தொண்டர்களை திரட்டி இந்திக்கு எதிராக போராடுவேன்” என அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவை சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியை கொண்டுவர முயற்சி.. இருமொழி கொள்கையைக் காற்றில் பறக்கவிடுவதுதான் திராவிட மாடலா? - சீமான் கண்டனம்..
அதிமுக தொண்டர் அணி மீட்புக் குழுவை சேர்ந்த புகழேந்தி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”தரவேண்டிய பணத்தைக் கேட்டால் கல்வித் திட்டத்தை நமது தலையில் புகுத்த மத்திய அரசு நாங்கள் கொண்டுவரும் திட்டத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று திணிக்கிறது. 1965க்கு பின்னால் பார்க்கிறோம். தெளிவாக மத்திய கல்வி அமைச்சர் சொல்லியிருக்கிறார். அனைவரும் ஒத்துக்கொள்கின்றனர். நீங்கள் ஏன் ஒப்புக்கொள்ளவில்லை எனக் கேட்கிறார். தமிழ்நாடு ஏன் பிடிவாதமாக உள்ளது என கேட்கிறார். அவருக்கு வரலாறு தெரியவில்லை.

அண்ணாமலை போன்றவர்கள் வரலாறு தெரிந்து அவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். பாராளுமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு இந்தியை தேசிய மொழியாக்குவதற்கு விவாதம் நடைபெற்றது. ”எங்கு பார்த்தாலும் காக்காய் தெரிகிறது. அதற்காக காக்கையை நாம் தேசிய பறவையாக ஏற்றுக்கொள்வதில்லை. மயிலைதான் தேசிய பறவையாக ஒப்பு கொண்டிருக்கிறோம்” என பேரறிஞர் அண்ணா கூறினார். உலகத்திலேயே மொழிக்காக போராடிய மாநிலம் இருக்கும் என்று சொன்னால் முதலில் தமிழ் தான். அதன் பிறகு தான் பங்களாதேஷ்.

தரவேண்டிய பணத்தை தருவதற்கு இதை ஒப்புக்கொண்டால் தருகிறேன் என்று சொன்னால் கட்சி வேறுபாடு இன்றி எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்பதை சொல்லிக் கொள்கிறேன். இதில் அரசு ஒரு முடிவை எடுக்குமேயானால் ஜல்லிக்கட்டுக்கு போராட்டத்தை நாம் கண்டோம். அந்த நிலை ஏற்பட வேண்டும். மத்திய அரசு நினைத்தால் நீங்கள் இதை தொடங்கி வையுங்கள்.

எங்களுக்குள் வேற்றுமை, வேறுபாடு இல்லை. தமிழ் மொழி என்பது எங்கள் தாய்மொழி என்பதை விட எங்களுக்கு பெரிதாக எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் நிலை வரும். மீண்டும் 1965 போல பாடம் சொல்லித் தரும் சூழல் ஏற்படும். காவிரி விவகாரத்தில் பாஜக தண்ணியை கொடுக்க மாட்டோம் என்று சொல்லும்.இங்கிருக்கும் பாஜக தண்ணீர் வேண்டும் என்று கேட்பார்கள். காங்கிரஸிலும் அதே நிலைமை தான்.இங்கிருக்கும் பாஜகவினர் தமிழுக்கு இணக்கமாக குரல் கொடுத்து ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் உங்கள் கட்சி கால் ஊன்ற முடியும்.

இந்தி படிக்கச் சொல்வதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், அதைத் திணிப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. பத்து சதவீதம் வியாபார நோக்கத்திற்காக வேண்டும் என்றால் ஹிந்தி தெரிந்து வைத்திருப்பார்கள். பலரும் இங்கு பிழைக்க வந்திருக்கிறார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகம். ஆனால் அங்கிருந்து இங்கு வருபவர்கள் கூட தமிழை கற்றுக் கொண்டு அழகாக பேசுகிறார்கள். ஆனால் இது ஆந்திரா, கர்நாடகா சென்றால் அங்கு ஹிந்தி தான் பேசுகிறார்கள். ஆனால், அது அந்த தாய் மொழிக்கு ஆபத்து. திமுக முதல்வருக்கு இந்த விவகாரத்தில் நாங்கள் ஆதரவை தருவோம்” என அவர் தெரிவித்தார்.

Read Entire Article