ARTICLE AD BOX
புதுடெல்லி: நாடு முழுவதும் தேர்தல் நடைமுறைகளை நவீனப்படுத்துவது குறித்தும், தற்போதுள்ள நடைமுறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. இதற்காக 2 நாள் மாநாடு வரும் மார்ச் 4 மற்றும் 5ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ்குமார் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஆகியோரையும் பங்கேற்க தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் முதல் நாள், தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு, பயனுள்ள தகவல் தொடர்பு, சமூக ஊடக வெளிப்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ பங்கு உள்ளிட்ட நவீன தேர்தல் நிர்வாகத்தின் முக்கிய பகுதிகள் குறித்த விவாதங்கள் நடைபெறும்.
* ஒரேநாடு, ஒரே தேர்தல் கூட்டாட்சியை பாதிக்காது
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானது அல்ல, கூட்டாட்சி அமைப்பை பாதிக்காது என ஒன்றிய சட்ட அமைச்சகம், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டுக் குழுவின் அடுத்த கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
The post நவீன தேர்தல் மேலாண்மை குறித்து தேர்தல் ஆணையம் 2 நாள் ஆலோசனை appeared first on Dinakaran.