“சாலையில் திடீர் விபத்து”… காயமடைந்த 4 பேர்… உடனே காரை நிறுத்தி ஓடோடி வந்து உதவிய உதயநிதி..!!

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை கோபாலசமுத்திரம் சாலையில் நேற்று 4 பேரை‌ ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோ கதீட்ரல் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார் ஒன்று திடீரென ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 4 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

அப்போது அவ்வழியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருந்தார். அவர் விபத்தை பார்த்ததும் உடனடியாக தன் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து காயம் அடைந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்தார். பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

Read Entire Article