ARTICLE AD BOX
ஆந்திரப் பிரதேசத்தின் அன்னமய்யா மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் யானைகள் தாக்கியதில் 3 பக்தர்கள் பலியானார்கள்.
அன்னமய்யா மாவட்டத்தின் ஒபுலவரிப்பள்ளி கிராமத்திலுள்ள வனப்பகுதி வழியாக தலக்கோணா கோயிலுக்கு 30 பேர் அடங்கிய பக்தர்கள் குழுவொன்று இன்று (பிப்.25) பாத யாத்திரை சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதிகாலை 2.30 மணியளவில் அங்கு வந்த யானைக் கூட்டம் ஒன்று பக்தர்களை விரட்டி தாக்கியுள்ளது.
இதையும் படிக்க: கனடாவில் புதிய விசா விதிமுறைகள்! 4.2 லட்சம் இந்திய மாணவர்கள் நிலை?
இதில், 3 பக்தர்கள் சம்பவயிடத்திலேயே பலியானார்கள். இந்த தாக்குதலில் மேலும் 3 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர் பலியானோரது உடல்களை மீட்டு இந்த சம்பவம் குறித்து விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, சுமார் 15 யானைகள் அடங்கிய கூட்டம் பக்தர்களைத் தாக்கியிருக்கக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், உயிர் பிழைத்த மற்ற பக்தர்களை அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.