வயநாடு நிலச்சரிவு நிதியுதவி போதாது: மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்

2 hours ago
ARTICLE AD BOX

புதுடெல்லி: கேரள எம்பியும், காங்கிரஸ் பொது செயலாளருமான பிரியங்கா காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்தாண்டு நடந்த நிலச்சரிவில் நிலைகுலைந்த சூரல்மலா, முண்டக்கை பகுதிகளை மீட்டெடுக்க அவசரகால மற்றும் நிபந்தனையற்ற நிதி உதவியை வழங்க வேண்டும். உயிர் வாழ்வாதாரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ரூ.529.50 கோடி நிவாரண உதவிகள் போதாது. இதுவும் ஏராளமான கட்டுப்பாடுகள், நிபந்தனைகளுடன் விடுவிக்கப்படுகிறது.

இரண்டு தவணையாக கொடுக்கப்படுகிறது. இரண்டாவது தொகையை மார்ச் 31ம் தேதிக்குள் செலவிட உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப கற்பனை செய்ய முடியாத துன்பங்களை எதிர்கொள்கிறார்கள். இதனை பார்க்கும் போது மனவேதனை அளிக்கிறது. வயநாடு நிலச்சரிவால் 298 பேர் பலியானார்கள். 231 பேரின் சிதறிய உடல் பாகங்களுடன் சடலங்கள் மீட்கப்பட்டன.

32 பேரை காணவில்லை. அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 17 குடும்பங்களை சேர்ந்த 58 பேர் உயிரிழந்தனர். 1,685 கட்டிடங்கள் சேதமடைந்தன. இவை வீடுகள், பள்ளிகள், கிராம அலுவலகங்கள், மருந்தகங்கள், அங்கன்வாடிகள், கடைகள், வழிபாட்டு மையங்கள், அரசு கட்டிடங்களும் அடங்கும். எனவே வயநாடு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்க வேண்டும். நிவாரண உதவியை மானியமாக மாற்றி, அதனை செயல்படுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார்.

The post வயநாடு நிலச்சரிவு நிதியுதவி போதாது: மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article