அரசின் சலுகைகளைப் பெற…. போலி திருமணம் செய்ய நினைத்த பெண்…. போலீஸ் அதிரடி..!!!

3 hours ago
ARTICLE AD BOX

உத்திரபிரதேசம் மாநிலம் ஹசன்பூரில் 300-க்கும் மேற்பட்ட மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விழா நடைபெற்றது. இதில் அஸ்மா என்ற பெண், தனது உறவினரான ஜாபர் அகமதுவை  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார். ஆனால் அவர் ஏற்கனவே திருமணமானவர்.  அவர் தனது முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறாமலே, 2-வது திருமணத்திற்கு முடிவு செய்திருந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக நூர் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கணவரை விட்டு பிரிந்து, தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அஸ்மா தனது உறவினரை திருமணம் செய்துக்கொள்ள இருந்த நிலையில், இதுகுறித்து அவரது மாமனார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அத்துடன் அவரின் கல்யாண சான்றிதழையும் கொடுத்துள்ளார். அதன்படி அவரது திருமணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சரின் கூட்டு திருமண திட்டத்தின் கீழ் மணமக்களுக்கு ரூ.35 ஆயிரம் உட்பட இலவச பொருள்கள் வழங்கப்படும். அந்த பரிசு பொருட்களையும், பணத்தையும் பிரித்துக் கொள்ள அஸ்மாவும், அவரது உணவினரும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். மேலும் அஸ்மா அரசாங்கம் தரும் அந்த பணத்தில் எருமை மாடுகள் வாங்க இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Read Entire Article