ARTICLE AD BOX

ராணிப்பேட்டை அருகே உள்ள திமிரியில் தனியார் திருமண மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வைத்து நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தற்போது தனியார் பள்ளிகளில் தமிழை எடுத்து விட்டார்கள் எனவும், அங்கு ஹிந்தி கற்பிக்கப்படுகின்றது என்றும் கூறினார். அதோடு தமிழை படித்தால் பிச்சை தான் எடுக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி எங்களை வீழ்த்த நினைக்கின்றார்கள் என்று கூறினார். மேலும் என்னை தாண்டி ஹிந்தியை திணியுங்கள் பார்க்கலாம் என்றும் ஆவேசத்துடன் பேசினார். அதோடு தமிழகத்தில் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர் திராவிட மாடல் என்ற பெயரில் ஆட்சிக்காக நடித்து கொடுத்து கொண்டிருக்கின்றார் என்றும், எங்களுக்கு கூட்டணி அவசியம் இல்லை என்றும் எல்லாவற்றையும் சொல்ல முடியாது கொஞ்சம் ரகசியம் வையுங்கள் என்றும் கூறினார். அதோடு மொழி குறித்த புரிதல் பா.ஜ.க-விற்கு இல்லை எனவும் புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் கல்வித்துறைக்கு நிதி வழங்கப்படவில்லை என்பது சரியல்ல நிதியை கூட கேட்டு பெற முடியாமல் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்துக் கொண்டு என்ன செய்கிறீர்கள்? அரசு ஊழியர்கள் நாள்தோறும் ஒவ்வொரு கோரிக்கைகளை முன்வைத்து போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு அழைத்து அவர்களிடம் பேசினாலும் தங்களது போராட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.