ARTICLE AD BOX
நயன்தாராவுக்கு லவ் ப்ரோபோஸா?.. வலைப்பேச்சு பிஸ்மியை ரோஸ்ட் செய்த நடிகை!
சென்னை: சென்னையை சேர்ந்த நடிகை சர்மிளா 90களில் தமிழ், மலையாளம் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். அவரை கேரள லேடி சூப்பர் ஸ்டார் என்றே கூறலாம். இந்நிலையில், வலைப்பேச்சு பிஸ்மியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். முன்னதாக நயன்தாரா வலைபேச்சு அந்தணன், பிஸ்மியை குரங்குகள் என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கேரள திரையுலகில் 2016ஆம் ஆண்டு நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. இதில், முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பலர் நடிகைகளுக்கும், முன்னணி நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இச்சம்பவம் நாடு முழுக்கு அதிர்வலையை ஏற்படுத்தின. இந்நிலையில், நடிகை சர்மிளா பழைய சம்பவத்தை புது குண்டாக போட்டார். மேலும், கேரள திரையுலகை அதிர வைத்தது.
பாலியல் புகார்: பிரபல தனியார் சேனலுக்கு சர்மிளா அளித்த பேட்டியில், காலம் மாறிப் போச்சு என்ற தமிழ் படத்தின் ரீமேக் ஆன அர்ஜூனன் பிள்ளையும் அஞ்சு மக்களும் என்ற படத்தில் நடித்து கொண்டிருந்தேன். இந்த படத்திற்கு பாடல் ஒன்று எடுப்பதற்காக படக்குழுவுடன் பொள்ளாச்சிக்கு வந்தோம். அப்போது, படத்தின் தயாரிப்பாளரும், அவரது நண்பர்களும் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றனர். இதில், ஓட்டல் ஊழியர் ஒருவரும் சேர்ந்து கொண்டார். நான் நோ என்று கதறியபடி வெளியே ஓடி வந்து விட்டேன். ஆட்டோ ஓடடுநரின் உதவியால் வீட்டிற்கு சென்றேன். இதுபோன்று மலையாள திரையுலகில் நடக்கிறது. ஏழை பெண்கள் நடிகையாக வரும் போது இது போன்ற சிரமத்தில் இருந்து தப்பிப்பது சிரமம் என சர்மிளா தெரிவித்திருந்தார்.

அட்ஜஸ்மென்ட்: எனது சினிமா பயணத்தில் அட்ஜஸ்மென்ட் என்ற வார்த்தை மிகவும் கொடியதாக பார்க்கிறேன் என சர்மிளாவே தெரிவித்துள்ளார். மலையாளத்தில் உருவான பரினயம் படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குநர் ஹரிஹரன் நடிகர் விஷ்ணு என்பவர் மூலம் அட்ஜஸ்மென்ட் பண்ணுவாரான்னு கேட்டார். நான் முடியாது என்று தெரிவித்தேன். இதனால், அந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன். கேரள திரையுலகில் பெண்கள் பணியாற்ற முடியாத நிலை என்றும். இதுவரை 28 பேர் என்னிடம் இதுபோன்று முயற்சித்துள்ளனர் என தெரிவித்தது பூதாகரமாக வெடித்தது. மலையாள திரையுலகமே இப்படித்தானா என்ற மோசமான பார்வை உருவானது.
சூப்பர் ஸ்டார்: இந்நிலையில், நடிகை சர்மிளா வலைபேச்சு பிஸ்மியை காட்டமாக விமர்சித்து பேசியிருப்பது தான் கோலிவுட்டை அதிர வைத்துள்ளது. இன்னும் என்ன புது குண்டை போடப்போகிறாரோ எனவும் பேச தொடங்கிவிட்டனர். வலைப்பேச்சு பிஸ்மி, தமிழ் சினிமா நடிகர்கள் நடிகைகள் குறித்த செய்திகளை அதிகம் பகிர்வார். இதில், அவர்களுக்கு எதிரான கருத்துக்களையும் பகிர்வது உண்டு. சமீபத்தில் நயன்தாராவை பற்றி பல விஷயங்களை கூறி வந்தார். சூப்பர் ஸ்டார் என்றால் அடிக்கணும் உதைக்கனும் நினைச்சுட்டு இருக்காங்க. சூப்பர் ஸ்டாருன்னா விஜயசாந்தி தான். அவர் ஆக்சன் காட்சிகளில் நடித்து பெரிய ஸ்டண்ட் காட்சிகளிலும் நடித்திருந்தார். அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம் என கூறினார் பிஸ்மி.

நயன்தாராவுக்கு ப்ரோபஸா: நடிகை சர்மிளா பிஸ்மியை ரோஸ்ட் செய்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், சூப்பர் ஸ்டார்னா ஆக்சன் காட்சிகளில் மட்டும் தானா, நடிப்பிலும் தனது திறமையை காட்ட வேண்டும். அதை நயன்தாரா அழகா வெளிப்படுத்துறாங்க. நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை பற்றி பிஸ்மி பலவிதமாக விமர்திக்கு பேசுகிறார். ஒரு வேளை விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்தது இவருக்கு ஏன் பிடிக்கவில்லை என தெரியவில்லை. ஒருவேளை நயன்தாராவை ப்ரொபோஸ் செய்திருப்பார். இதற்கு நயன்தாரா சம்மதித்திருக்க மாட்டார். இதனால் தான் விக்னேஷ் சிவனைப் பார்த்தால் இவருக்கு எரியுதோ என்னமோ.
செலிபிரட்டி: பிஸ்மி தன்னை ஒரு செலிபிரட்டி என நினைத்து கொண்டு இப்படி பேசுகிறார் என நினைக்கிறேன். இதேபோன்று குஷ்புவையும் பேசியுள்ளார். ஹீரோவாக நடித்து பெரிய நடிகராக வர ஆசைப்பட்டிருப்பார் என நினைக்கிறேன். அந்த ஆதங்கத்தில் நடிகர், நடிகைகளை இப்படி பேசி வருகிறார் என சர்மிளா பிஸ்மியை பொளந்து கட்டியுள்ளார்.