Good Bad Ugly Song Update: ஹை வோல்டேஜ்.. குட் பேட் அக்லியின் ஒரிஜினல் சம்பவத்திற்கு அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்..

3 hours ago
ARTICLE AD BOX

முதல் சிங்கிள் ரிலீஸ்

குட் பேட் அக்லி படத்தின் டீசர் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், டீசரின் மேக்கிங் வீடியோவை நேற்று மார்ச் 14 ஆம் தேதி படக்குழு ரிலீஸ் செய்தது. அந்த வீடியோவின் இறுதியில் குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிள் வரும் மார்ச் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

ஜிவி பிரகாஷ் அப்டேட்

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலே குட் பேட் அக்லியின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட்டை படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிள் ஹை வோல்டேஜ் எலிவேஷன் ட்ராக்காக இருக்கும். அது மாஸான கூறுகளும் கொண்ட ஒரு நபரைப் பற்றிய ஒரிஜினல் சம்பவமாக இந்தப் பாடல் மார்ச் 18 ஆம் தேதி முதல் வெளியாகும் எனக் கூறியுள்ளார்.

ஒரிஜினல் சம்பவம்

முன்னதாக, மார்ச் 8ஆம் தேதி, குட் பேட் அக்லி படத்தின் முதல் சிங்கிள் குறித்து அப்படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் அப்டேட் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பதிவில், குட் பேட் அக்லி படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் சீக்கிரம் வரும் மாமே.. சுட சுட ரெடி பண்ணிட்டு இருக்கோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பின் மார்ச் 10 ஆம் தேதி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அசத்தல் அப்டேட் ஒன்றை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்த ஜி.வி. பிரகாஷின் எக்ஸ் தள பதிவில், " ஒஜி (ஒரிஜினல்) சம்பவம் இறுதிகட்ட வேலைகளில் சென்று கொண்டிருக்கிறது. சம்பவம் இருக்கு எனக் கூறியுள்ளார். இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் ஜிவி பிரகாஷை கொண்டாடி வருகின்றனர்.

எப்படி இருக்கும் சிங்கிள்?

அதுமட்டுமின்றி, குட் பேட் அக்லி படத்திலிருந்து வரும் முதல் சிங்கிளானது நிச்சயம் அஜித்தின் இன்ட்ரோ பாடலாகத் தான் இருக்கும் எனவும், அந்தப் பாடலும் அஜித்தை கேங்ஸ்டராக காட்டப்படுவதால் நிச்சயம் ஜெயிலில் வரும் பாடலாகத்தான் இருக்கும் என ஒருதரப்பு கூறுகிறது. மற்றொரு தரப்பு, இது ஹீரோ இன்ட்ரோ பாடல் தான். ஆனால் அது அஜித்தின் வரலாறை கூறும் பாடல் போல அமையும். அந்தப் பாடலில் தான் அஜித் பல கெட்டப்களில் வந்திருப்பார் என ஒரு தரப்பும் கூறுகிறது. ஆனால் இதில் எது உண்மை என்று தெரியவில்லை. அனைவரும் யூகத்தின் அடிப்படையில் தான் இதனைக் கூறி வருகின்றனர்.

ஃபுல் எனர்ஜியில் ரசிகர்கள்

ஏற்கனேவே படத்தின் டீசரை பார்த்து வைப் ஆன ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட் கொடுத்த மாதிரி இருந்தது ஜி.வி பிரகாஷின் இந்த பதிவு. இந்த பதிவு வெளியிடப்பட்ட சில மணி நேரத்திலேயே ரசிகர்களிடம் வேகமாகப் பரவியது.

அத்துடன், குட் பேட் அக்லி படத்தின் டீசர் ஒரிஜினல் தீம் மியூசிக் ஸ்பாட்டிஃபையில் வெளியிடப்பட்டது. ஒரே நாளில் கிடைத்த அடுத்தடுத்த அப்டேட்களால் குஷயில் கொண்டாடி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
Read Entire Article