ARTICLE AD BOX

ஸ்வீட் ஹார்ட் மற்றும் பெருசு படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ரியோ ராஜ் நடிப்பிலும் இயக்குனர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்திலும் நேற்று வெளியான திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். காதல் கதை களத்துடன் வெளியான இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் முதல் நாளில் 75 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதனைத் தொடர்ந்து இளங்கோ ராமநாதன் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் வெளியான திரைப்படம் பெருசு. மேலும் சுனில் ரெட்டி சாந்தினி பால சரவணன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளில் 50 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

The post ஸ்வீட் ஹார்ட் VS பெருசு : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.