இந்த வார இறுதியை அட்டகாசமாக கழிக்க சென்னையின் இந்த 7 இடங்களுக்கு செல்லுங்கள்!

4 hours ago
ARTICLE AD BOX

சென்னை சுற்றுலாத் தலங்கள் சென்னைக்கு உள்ளேயே பீச், பார்க், மால் என சுற்றி சுற்றி எங்களுக்கு போர் அடித்து விட்டது! புதிதாக, தனிமையாக, அழகான மற்றும் அமைதியான சில இடங்களுக்கு செல்ல வேண்டும், ஆனால் அதே நேரத்தில், அவை சென்னையிலிருந்து வெகு தொலைவிலும் இருக்கக்கூடாது! என நீங்கள் யோசித்தால், உங்களுக்கான சூப்பர் ஐடியாக்களை நாங்கள் தருகிறோம்! இந்த பதிவில் நீங்கள் பார்க்கப் போகும் இடங்கள் யாவும் சென்னையிலிருந்து ஒரு சில மணி நேரத்தில் இருக்கும் அழகான, அமைதியான சூப்பர் சுற்றுலாத் தலங்கள்!!!

முட்டுக்காடு

சென்னையிலிருந்து வெறும் 36 கி.மீ தொலைவில் உள்ள அழகிய உப்பங்கழி இடமான முட்டுக்காடு, இயற்கை ஆர்வலர்களுக்கும் சாகச விரும்பிகளுக்கும் ஒரு நாள் பயணத்திற்கு ஏற்ற இடமாகும். அமைதியான நீர்நிலைகள் மற்றும் பசுமையான பசுமைக்கு பெயர் பெற்ற இது, படகோட்டுதல், வேக படகு சவாரி மற்றும் கயாக்கிங் உள்ளிட்ட சிலிர்ப்பூட்டும் படகு சவாரி அனுபவங்களை வழங்குகிறது. நகர வாழ்க்கையிலிருந்து ஓய்வெடுக்க ஏற்ற இடமான முட்டுக்காடு, இயற்கையின் மத்தியில் ஓய்வெடுக்க விரும்புவோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடமாகும்.

புலிகாட்

சென்னையிலிருந்து சுமார் 1 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள இந்த புலிகாட் மிக அழகான ஒரு சிறிய கடற்கரையாகும். ஸ்ரீஹரிகோட்டா தீவில் அமைந்துள்ள இந்த புலிகாட் இயற்கை அழகு, வரலாறு மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றின் கலவையை உங்களுக்கு பிரதிபலிக்கிறது. இங்கு மிகவும் விரும்பப்படும் இடங்கள் புலிகாட் ஏரி மற்றும் புலிகாட் பறவைகள் சரணாலயம் ஆகும், இது உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பறவைகளை ஈர்க்கிறது. மேலும் கடற்கரை, டச்சு கல்லறை, கோட்டை, காலனித்துவ கால தேவாலயங்கள், வெதுருப்பட்டு மற்றும் நெலப்பட்டு ஆகியவை இங்கு நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். சென்னையிலிருந்து 55 கிமீ தொலைவில் அமைந்துள்ள புலிகாட்டை அவுட்டர் ரிங் ரோட் வழியாகவும், இ.சி.ஆர் வழியாகவும் அணுகலாம்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

சென்னையிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். உலகின் மிகப்பழமையான பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாக 1798-ஆம் ஆண்டிலிருந்து பறவைகளின் வாழ்விடமாகவும், புகலிடமாகவும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திகழ்ந்து வருகிறது. 250 ஆண்டு காலமாக வேடந்தாங்கல் கிராம மக்கள் பறவைகளை தங்கள் குழந்தையை பாதுக்கப்பது போல பாதுகாத்து வருகிறார்கள். நீங்கள் குழப்பமாக இருந்தால் இந்த இடத்திற்கு சென்று வாருங்க, நிச்சயம் தெளிவு கிடைக்கும்.

நாகலாபுரம் மலைகள்

சென்னையில் இருந்து வெறும் 90 கிமீ தொலைவில் அமைந்துள்ள நாகலாபுரம் பல நீர்வீழ்ச்சிகளுடன், கண்கவர் இயற்கை சூழலால் நம் மனதை மயக்குகிறது. நாகலாபுரத்திற்கு உங்கள் சொந்த வாகனங்களில் செல்வதே சிறந்தது. செக் போஸ்டை ஒட்டியிருக்கும் பார்க்கிங்கில் உங்களது கார் அல்லது பைக்கை பார்க் செய்துவிட்டு. அங்கிருந்து நடக்க ஆரம்பிக்கலாம். 5 அருவிகள் கொண்ட நாகலாபுரம் நீர்வீழ்ச்சிகள் ஒவ்வொன்றை அடைவதற்கும் குறைந்தபட்சம் 20 முதல் 25 நிமிடங்கள் ஆகிறது. நீங்கள் ஒரு செட் மாற்றுத்துணி, வழுக்காத செருப்பு, டவல், பிஸ்கட், சாக்லேட், தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டி எடுத்து செல்வது அவசியம். ஏனெனில் அங்கு எதுவும் கிடைக்காது.

புதுச்சேரி

சென்னையிலிருந்து அதிகப்படியான இளைஞர்கள் செல்லும் வார இறுதி சுற்றுலாத் தலம் இந்த புதுச்சேரி நகரம் தான்! புதுவையில் உள்ள இந்திய மற்றும் பிரெஞ்சு கலாச்சாரத்தின் வசீகரிக்கும் கலவையானது ஆண்டு முழுவதும் எல்லையற்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. புதுவைக் கடற்கரை, பிரஞ்சு பாணி வீடுகள், துடிப்பான கஃபேக்கள், அமைதியான சூழல், பல்வேறு தேவாலயங்கள், கோவில்கள், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் என புதுவையில் பொழுதைக் கழிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. சென்னையிலிருந்து 13௦ கிமீ அமைந்துள்ள இந்த நகரத்தை 2 அல்லது 3 மணி நேர பயண தூரத்தில் அடைந்து விடலாம். புதுவைக்கு செல்ல இரண்டு சாலை வழிகள் உள்ளன, ஒன்று பைபாஸ் மற்றொன்று இ.சி.ஆர் ஆகும்.

பிச்சாவரம்

நீங்கள் மகாபலிபுரம், புதுச்சேரி பயணத்தை சற்றே கொஞ்சம் தொடர்ந்தால் மிகவும் அழகிய இடமான பிச்சாவரத்தை அடையலாம். சென்னையை சுற்றியுள்ள இளைஞர்களும், புதியதாக திருமணமான இணைகளும் அடிக்கடி வருகை தரும் இடம் பிச்சாவரம். இங்கு செல்வது மிக எளிது என்பதாலும், இயற்கை விரும்பிகளுக்கு தனிமையுடன் கூடிய நல்ல அமைதியும் கிடைக்கும் என்பதாலும், நீண்ட நேர பைக் ரைடு மற்றும் லாங்க் டிரைவ் போக வழிவகுக்கும் என்பதாலும் இந்த இடம் அதிகம் விரும்பப்படுகிறது. பாண்டிச்சேரியில் இருந்து 66 கி.மீ தொலைவில் இருக்கும் பிச்சாவரம் அலையாத்தி காடுகள். இந்தியாவிலேயே இவ்வகை மாங்க்ரோவ் காடுகள் மேற்கு வங்காளத்திலும் தமிழகத்தில் பிச்சாவரத்தில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தை நாம் மிஸ் பண்ணலாமா?

மாமண்டூர் காடுகள்

சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகிய இடமா என்று இந்த இடம் நம்மை வியக்க வைக்கிறது. எங்கு பார்த்தாலும் பசுமை, அடர்ந்த வனாந்திரம், பச்சை நிற அழகிய தெளிவான நீர், கூழாங்கற்கள் பாதை என இந்த இடம் பார்ப்பதற்க்கு ஏதோ நாம் அந்தமானில் இருப்பது போன்ற ஒரு உணர்வை தருகிறது. ஆனால் இந்த இடம் சென்னையில் இருந்து வெறும் 3 மணி நேர பயண தூரத்தில் சென்னை - கடப்பா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் அல்லது பிக்னிக் செல்ல இது சரியான சாய்ஸ் ஆகும்.

Read Entire Article