நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

3 days ago
ARTICLE AD BOX
Moondru Mudichu Serial Today Promo Update 21-02-25

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 21-02-25Moondru Mudichu Serial Today Promo Update 21-02-25

நேற்றைய எபிசோடில் மாதவி வீட்டை விட்டு கிளம்ப, சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டே இருந்தா அவ என்ன வேணா தப்பு பண்ணலாம்னு நினைப்பா என்று சொல்ல அதற்கு அருணாச்சலம் இதுவரைக்கும் என்ன தப்பு பண்ணி இருக்கா சொல்லு என்று சொல்ல அவ இந்த வீட்டுக்கு வந்ததே தப்புன்னு சொல்றேன் என்று சொல்லுகிறார். அந்த மருந்து முதல்ல குழந்தை பெத்துக்கறதுக்குன்னு நான் சொன்ன நீ சண்டை போட்ட சரி ஆனா அது சூரியாவோட கூடிய நிறுத்தறதுக்குன்னு தெரிஞ்சும் நீ இப்படி பேசுறதுல என்ன நியாயம் இருக்கு என்று சொல்ல சுந்தரவல்லி மீண்டும் கோபப்பட்டு பேசுகிறார். மாதவியும் அசோகனும் துணிகளை எடுத்துக்கொண்டு கிளம்ப, சுரேகா ஓடிவந்து மாதவியும் அசோகனும் வீட்டை விட்டு போக போறாங்க என்ற விஷயத்தை சொல்ல, சுந்தரவல்லி அவர்களை தடுத்து நிறுத்தி, என்ன நடந்துச்சுன்னு கிளம்பி போற என்று கேட்க அருணாச்சலம் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். நீங்க யாரு என்ன தடுக்கத் தேவையில்லை உங்க வேலைய மட்டும் பாருங்க என்று சொல்ல, என்னடி நடக்குது இங்க எதுக்கு பெட்டியை தூக்கிட்டு போறீங்க என்று சொல்ல, என்ன விஷயம்னு உங்க வீட்டு கார்ர்கிட்ட கேளுங்க என்று சொல்ல நான் என்ன சொன்னேன் என்று அருணாச்சலம் கேட்க நான் தான் சூர்யாவிற்கு மருந்து கொடுத்து கொல்ல பார்த்தேன் நீங்க சொல்லி இருக்கீங்க, நான் என் தம்பியை கொல்லபாப்பனா என்று கோபப்படுகிறார்.

உன்கிட்ட யார் சொன்னது என்று கேட்க, யார் சொன்னாங்கன்றது இருக்கட்டும் இந்த வீட்ல இருக்குறவங்க தான் மருந்து கொடுத்து இருப்பாங்கன்னு சொன்னீங்க இல்ல இந்த வீட்ல இருக்கிறது ஆறு பேர்தான் நீங்க அம்மாவ சொன்னீங்களா இல்ல சுரேகாவை சொன்னீங்களா இல்ல உங்க மருமகள சொன்னீங்களா நீங்க அவ மேல உங்களுக்கு சந்தேகமே வராது. மீதி இருக்கிறது நானும் என் புருஷனும் மட்டும்தான் அப்போ நீங்க எங்க மேல பழி போடுறீங்க அப்படித்தானே என்று கேட்கிறார். நான் ஏன் உங்க மேல பழி போடணும் நீ என் பொண்ணு அவரு என்னோட மருமகன் எப்படி சொல்லுவேன் என்று சொல்ல, நீங்க அப்படி தான் சொல்லி இருக்கீங்க என்று கோபப்பட சுந்தரவள்ளியும் அருணாச்சலத்திடம் அவங்க மேல எந்த தப்பு இல்ல. உங்க மேல தான் தப்பு அவளை வீட்டை விட்டு தொரத்த உங்களால் முடியல நம்ம பொண்ணு மேல பழி போட்டு இருக்கீங்க என்று பேச மாதவி இதுக்கு மேல நாங்க இங்க இருக்க மாட்டோம் எங்களை விட்டுடுங்க என்று சொல்ல சுந்தரவல்லி அவர்களை தடுத்து நிறுத்துகிறார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரேணுகா இதுல யாரோ ஒருத்தர் மிஸ் ஆவுறாங்களே என்று நந்தினி என நினைத்து நந்தினி கோத்து விட தனியாக நிறுத்தி உங்களுக்கும் சூர்யா சாரோட அக்கா தங்கச்சிக்கும் செட்டாகாதா என்று கேட்க எதுக்கு சொல்றேன் என்று கேட்கிறார். நீங்க சூர்யா சாருக்கு நல்லது தான் நினைக்கிறீங்க ஆனா உங்க மேல பழி வருது என்று சொல்லுகிறார். மறுபக்கம் மாதவி இதுக்கு அப்புறம் சூர்யாவுக்கு என்ன ஆனாலும் நாங்க தான் காரணம்னு சொல்லுவீங்க என்று சொல்ல, எல்லாமே உங்களால தான்பா என்று சுரேகா சொல்ல சுந்தரவள்ளியும் கோபப்பட்டு திட்டுகிறார். பிறகு ரேணுகா வெளிய ஒரு பிரச்சனை நடந்துக்கிட்டு இருக்கு என்று சொல்லி நடந்த விஷயங்களை நந்தினி இடம் சொல்லுகிறார். என்ன நடக்கப்போகுதோ தெரியல மாதவி அம்மாவை ஐயா சமாதானப்படுத்திக்கிட்டு இருக்காரு என்று சொல்ல நந்தினி ஓடி வருகிறார்.

நந்தினி வந்தவுடன் மாதவி எல்லா பண்ணது இவ பழி மட்டும் என் மேலயா என்ன பாத்தா இளிச்சவாய் மாதிரி இருக்கா என்றெல்லாம் கேள்வி கேட்க நந்தினி அப்படியெல்லாம் சொல்லாதீங்கம்மா நான் எந்த தப்பும் பண்ணல என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் போதும் நிறுத்துங்க இதுக்கு மேல நான் என்ன சொன்னாலும் யாரும் நம்ப போறது கிடையாது நான் சொன்னதாகவே இருக்கட்டும் என்ன மன்னிச்சிடு மாதவி என சொல்லுகிறார். உடனே நந்தினி எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம் அவர குடியிலிருந்து நிறுத்த நான் தான் நாட்டு மருந்து வாங்கி அவருக்கு தெரியாமல் கொடுத்த என்னால தான் பிரச்சனை இதுல வேற யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மன்னிப்பு கேட்கிறார். நான் செஞ்ச தப்புக்கு என்ன தண்டனை வேணாலும் கொடுங்க நான் ஏத்துக்குறேன் என்று சொல்ல சுந்தரவல்லி அப்படியா வெளிய தானே இருக்க இப்படியே போயிடு என்று சொல்ல, மாதவி அவ போக வேண்டாம் நாங்க தானே போகணும் என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி நம்ம பொண்ணு எதுக்கு போகணும் என்று அருணாச்சலத்திடம் கேள்வி கேட்கிறார்.

சுந்தரவல்லி அதுதான் எந்த தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறான்னு சொல்றால வீட்டை விட்டு போக சொல்லுங்க என்று சொல்ல அருணாச்சலம் யாரு வீட்டை விட்டு போக வேண்டாம் உள்ள போங்க என சொல்லுகிறார். உண்மை ஒரு நாள் வெளிய வந்தே தீரும் என்று சொல்லிவிட சுந்தரவல்லி கோபமாக மாதவியை உள்ளே அழைத்து சென்றுவிடுகிறார். உடனே நந்தினி என்னால தான் எல்லாமே ஐயா என்று கண்கலங்க அருணாச்சலம் உன்னால எல்லாம் இல்லமா நீ உள்ள போ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். நேராக கிச்சனுக்கு வந்த நந்தினி அழுது கொண்டே காய்கறிகளை வெட்டிக்கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து கல்யாணம் வருகிறார். நந்தினி அழுது கொண்டிருப்பதை பார்த்து என்ன ஆச்சுமா என்று கேட்க அண்ணே அப்படி வெளிய போயிட்டு வரத்துக்கொள்ள என்ன ஆச்சுமா என்று கேட்க ஒன்றும் இல்லை அண்ணா என்று சொல்லுகிறார். நீ அழாதம்மா நீ அழுதா என் மனசு தாங்காதுல என்று சொல்ல, நான் இந்த பூமியில் பொறந்தே இருக்க கூடாது, எனக்கு இந்த ஜென்மமே வேண்டாம் என்று அழ என்ன விஷயம் என்று சொல்லுமா என்று கேட்கிறார். பிறகு அங்கு நடந்த விஷயங்களை நந்தினி கல்யாணத்திடம் சொல்லுகிறார். இவ்வளவு நடந்துருச்சா மனுஷங்க நான் கொஞ்சம் மனசாட்சி இருக்கணும், கொஞ்சமாவது யோசிக்கிற புத்தி கூட இல்லை என்று சொல்லுகிறார். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல எங்க அம்மா மடியில படுத்து அழனும் போல இருக்கு ஏன்மா என்ன விட்டுட்டு போன என்னையும் கூட கூட்டிட்டு போய் இருக்கலாம் தோணுச்சு ஆனா எனக்கு அதுக்கு கூட குடுத்து வைக்கலன்னா என்று கதறி அழுகிறார். அருணாச்சலம் இப்படி மனசு உடைஞ்சு பேசாதமா எல்லாருக்கும் கஷ்டம் வரும் அது மாதிரி நினைச்சுக்கோ என்று சொல்லுகிறார்.

நந்தினி கல்யாணத்திடம் என்னால முடியல, நான் பாட்டுக்கு என் குடும்பத்தோட ஊர்ல நிம்மதியா இருந்த என்னை இந்த வீட்டில அடைச்சு வச்சு செய்யாத தப்புக்கெல்லாம் நீதான் நீதான் என்று சொல்றாங்க எனக்கு மூச்சு முட்டாதா அண்ணே, என்னால முடியல என்று சொல்ல அதற்கு கல்யாணம் படிப்பறிவில்லாத எனக்கே எல்லாம் புரியும் போது அவங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குதுன்னு தெரியலமா. சுந்தரவல்லி அம்மாவுக்கும், சின்னையாவோட அக்கா தங்கச்சி இந்த ரெண்டு பேருக்கும் உன்னை ஆரம்பத்திலிருந்து பிடிக்காதுமா அதனால நீ நின்னா குத்தம் நடந்தால் குத்தம் சொல்லிக்கிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார். நான் ஒன்னும் இங்க சொத்து அனுபவிக்கனும்னு இங்க இல்லையே இப்ப கூட ஒரு வார்த்தை சொன்னால் எல்லார் காலையும் விழுந்து கும்பிட்டு நான் ஓடிப் போயிடுவேன் என்று சொல்லுகிறார் நந்தினி. ஆனால் கல்யாணம் சின்னய்யாவும் பெரியய்யாவும் உன்ன என்னைக்குமே கைவிட மாட்டாங்கம்மா அவர்கிட்ட சொன்னியா என்று சொல்ல இல்லன்னு அவர்கிட்ட சொல்லல அவர் இதைவிட பெரிய பிரச்சனையை உண்டாக்கி விட்டுருவாரு என்று சொல்ல கல்யாணம் எனக்கு கூட பொறந்தவங்க யாரும் இல்லம்மா நான் உன்ன தங்கச்சியா நினைச்சுக்கிட்டு இருக்கேன் நீ அழக்கூடாது கன்னத்தொடை என்று டவல் கொடுத்து துடைக்க சொல்ல நந்தினியும் துடைக்க இனிமே நீ அழவேக்கூடாது என் தங்கச்சி சிரிச்சிகிட்டே இருக்கணும் சிரிமா என்று சொல்ல நந்தினி சிரிப்பது போல் செய்து விட கல்யாணம் நான் போய் கருவேப்பிலை எடுத்துக் கொண்டு வரேன் என்று சொல்ல நந்தினி மீண்டும் கதறி அழுகிறார். அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் நம்ம வீட்ல ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகிட்டே இருக்கு எங்கேயாவது ஃபேமிலி ட்ரிப் போலாமா என்று கேட்டுக் கொண்டிருக்கிற சூர்யா நடக்க முடியாமல் நடந்து வருவதைப் பார்த்து சுந்தரவல்லி என்னாச்சு இவனுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறான் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது தவறி கீழே விழ சுந்தரவல்லி தூக்க போக சூர்யா அவரை தட்டிவிட்டு நந்தினி நந்தினி என கூப்பிடுகிறார்.ஓடி வந்த நந்தினி இடம் இங்கே இல்லாம நீ எங்க நீ போன என்று கேட்கிறார். இதனால் சுந்தரவல்லி முறைத்து பார்க்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவிடம் சுந்தரவல்லி என்ன நான் உன்ன தொட்டா கம்பளி பூச்சி ஊற மாதிரி இருக்கா என்று கேட்க, வெஷ பூச்சி ஊற மாதிரி இருக்கு என்று சொல்லுகிறார். சூர்யாவின் பேருக்கு சுந்தரவல்லி அர்ச்சனை செய்ய வர அர்ச்சனா கோவிலில் சூர்யாவுக்காக யாகம் செய்கிறார்

பெத்த பையனுக்கு உடம்பு முடியலன்னு தானே வராங்க இப்படி மூஞ்சால அடிச்ச மாதிரி பேசுவீங்க அவங்க மனசு வெருத்து போகாது என்று சூர்யாவிடம் நந்தினி கேட்க அதுதான் வேணும் என சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 21-02-25Moondru Mudichu Serial Today Promo Update 21-02-25

The post நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article