ARTICLE AD BOX
பாகிஸ்தானில் 8 அணிகள் கலந்துகொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி போட்டிகள் மட்டும் பாதுகாப்பு காரணமாக துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதிபெறாமலேயே வெளியேறியது. தவிர, இந்திய அணியிடம் அவ்வணி தோல்வியடைந்ததும் அதிக விமர்சனத்தை ஏற்படுத்தியது.
1996 உலகக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் முதல் ஐசிசி இது என்பதால், சொந்த அணி சிறப்பாக விளையாடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த அணி அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியதால் விமர்சனங்களால் துளைத்தெடுக்கப்படுகிறது. சாம்பியன் டிராபிக்காக மைதானங்களைப் பராமரித்த அளவுக்குக்கூட, பாகிஸ்தான் அணி வீரர்களைத் தேர்வு செய்யவில்லை எனக் காட்டமாக விமர்சனம் வைக்கப்படுகிறது. மூத்த வீரர்கள் பலரும் அணி நிர்வாகத்தையும் வீரர்களையும் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
அந்த வரிசையில் மூத்த வீரர் அகமது சேஷாத்தும் பாகிஸ்தான் அணியைச் சாடியுள்ளார். அவர், “ஓர் அணியில் சிறப்பாக விளையாடும் வீரரை கேப்டனாக பொறுப்பேற்க வைப்பது மிகப்பெரிய தவறு. பாபர் அசாம் கேப்டனாக மாறியவுடன் அவர் தனது நண்பர்களையே தன்னைச் சுற்றி வைத்துக்கொண்டார். அணியில் திறமையான வீரர்களுக்கு மதிப்பளிக்காமல் அவர்களுடைய நண்பர்களையே அவர் தேர்ந்தெடுத்தார். அணியில் இருக்க தகுதியுடைய வீரர்களை நீக்கிவிட்டு உங்கள் நண்பர்களையே வைத்தால், ஒட்டுமொத்த கிரிக்கெட்டுமே பாதித்துவிடும். இதன்மூலம் நன்றாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் எப்போதுமே அரசியல் தலையீடு நிச்சயம் இருக்கும். அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்போது பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். நன்றாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் எப்படி உங்களால் வெற்றி பெற முடியும்” எனச் சாடியுள்ளார்.