ARTICLE AD BOX

அமெரிக்காவில் சமீபகாலமாக விமான விபத்துக்கள் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மீண்டும் ஒரு விமான விபத்து நடந்துள்ளது அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது நியூயார்க் மாகாணத்தில் இருந்து இண்டியானா மாகாணத்திற்கு ஒரு சரக்கு விமானம் கிளம்பியது. இந்த விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு பறவை வந்து மோதியது.
இதில் விமான என்ஜின் தீப்பிடித்து எரிய ஆரம்பித்த நிலையில் உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நெவார்க் ஏர்போர்ட்டில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.