ARTICLE AD BOX

1997 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் தான் அருணாச்சலம். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்தார். கூடவே ரம்பா, மனோரமா, ஜெய்சங்கர் என பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்காக தமிழ் நாடு மாநில திரைப்பட விருதை பெற்றது. இந்தப் படத்தை பற்றி சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறியிருப்பது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.
சுந்தர் சி சமீபகாலமாக லைம் லைட்டில் இருக்கும் இயக்குனராக மாறியிருக்கிறார். மதகஜராஜா படம் கொடுத்த வெற்றி அவர் மீது ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படம் மட்டுமில்லாமல் அதற்கு முன் வெளியான அரண்மனை 4 திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி. இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்து வரும் சுந்தர் சி அடுத்ததாக நயன் தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தையும் எடுக்க இருக்கிறார்,
அந்தப் படத்திலும் சுந்தர் சி ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இயக்கும் சமீபகால படங்களில் சுந்தர் சி எப்படியாவது ஒரு கேரக்டரில் நடித்து விடுவார். அந்தப் படமும் வெற்றிப்படமாகவே அமைந்து விடுகிறது. இது ஒரு செண்டிமெண்ட்டாக கூட பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அருணாச்சலம் படத்தை முழுக்க முழுக்க காமெடியாக எடுக்க வேண்டும் என ரஜினியிடம் சொல்ல அப்போ கிரேஸி மோகனை வைத்து பண்ணலாம் என ரஜினி கூறியிருக்கிறார்.
கிரேஸி மோகன் என்று சொன்னதும் சுந்தர் சிக்கு டபுள் சந்தோஷம். அப்படி படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது ரஜினி திடீரென இந்தப் படத்தை இப்போதைக்கு நிறுத்திக் கொள்ளலாம். அப்புறம் பண்ணலாம் என சொல்லிவிட்டு சென்று விட்டாராம். உடனே கிரேஸி மோகன் சுந்தர் சியிடம் மிகுந்த கோபத்தில் ‘என்னய்யா இவரு? இப்படி இரண்டு மாதம் கழிச்சு ஆரம்பிக்கலாம்னு சொல்லிட்டு போறாரு. இப்படி நிறுத்தினால் எப்படி?’ என கத்திவிட்டாராம்.
இதை பற்றி சுந்தர் சி கூறும் போது முதன் முறையாக கிரேஸி மோகன் கோபப்பட்டு அப்பொழுதுதான் பார்த்தேன்.அதுவும் ரஜினி மீது இந்தளவு கோபப்படுவாரா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது என சுந்தர் சி கூறினார்.