சோஷியல் மீடியா இன்புளுயன்சர்களுக்காக பாடலாசிரியர் விவேகா புது முயற்சி

4 hours ago
ARTICLE AD BOX

சென்னை: SISMIA என்ற தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கம் (South indian social media influencers association) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் பாடலாசிரியர் விவேகா, செயலாளர் எல்என்எச் கிரியேஷன்ஸ் கே.லஷ்மி நாராயணன் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர். அப்போது விவேகா கூறுகையில், ‘சோஷியல் மீடியா இன்புளூயன்சர்கள், தங்கள் திறமையை மூலதனமாக வைத்து செயல்படுகிறார்கள். அவர்களை தாய்மையுடன் அரவணைத்து செல்வதற்காக இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

சோஷியல் மீடியா மூலம் சாதாரணமானவரை கூட உச்சத்துக்கு கொண்டு செல்ல முடியும். அது ஒரு கூர்மையான கத்தி. நேர்மையாக கொண்டு செல்லும்போது பல சாதனைகளை படைக்க முடியும். சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கும் விதமாகவே இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது’ என்றார். சோஷியல் மீடியா இன்புளூயன்சர்களை ஒருங்கிணைத்து உரிமைகளை பெற்று தருவது மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது, புதிய பணி வாய்ப்பை ஏற்படுத்துவது, பயிற்சி முகாம்கள் அமைப்பது, ஒன்றிய மற்றும் மாநில அரசுடன் பேசி நலத்திட்டங்களை பெற்று தருவது போன்றவை இந்த சங்கத்தின் நோக்கங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Read Entire Article