ARTICLE AD BOX
நடிகை அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
நடிகை அபிநயா தமிழ், தெலுங்கு, மலையாளம் முள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடிக்க வருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர், ஈசன், வீரம், ஏழாம் அறிவு, தனி ஒருவன், பூஜை, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அடுத்தது இவர் சுந்தர். சி, நயன்தாரா கூட்டணியில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார் அபிநயா. இந்நிலையில் தான் அபிநயாவுக்கும், விஷாலுக்கும் திருமணம் நடைபெறப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை நடிகை அபிநயா மறுத்திருந்தார். ஏனென்றால் கிட்டத்தட்ட 15 வருடங்களாக தனது நண்பர் ஒருவரை காதலித்து வருவதாக கூறிய அபிநயா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று (மார்ச் 9) தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.