ARTICLE AD BOX
திருமண விழாவுக்கான உடைகளைத் தேர்ந்தெடுக்கும் முன் அந்த நாளில் என்னென்ன நகைகளை வெளியே போகிறோம் என்பதை முடிவு செய்துவிட வேண்டும். மணமகன் என்ன உடை அணிய விருக்கிறார் என்பதை அறிவதும் அவசியம். அதுமட்டுமல்ல மேடை அலங்கார அமைப்பு அதன் பின்னணியில் உள்ள நிறம், ஆகியவை பற்றியும் தயங்காமல் கேட்டு செய்யவேண்டும். இதற்கு ஏற்ப உடையை தேர்ந்தெடுத்தால் போட்டோ, வீடியோ எடுக்கும்போது பிரமாதமாக அமையும்.
மணப்பெண்ணின் ஸ்கின் டோனுக்கு பொருத்தமான நிறத்திலேயே பிரதான உடைகளை தேர்வு செய்யவேண்டும்.
மணப்பெண் உடைய டிசைன் செய்ய குறைந்தது இரண்டு வாரங்களாவது ஆகும். அதற்கு ஏற்ப முன்னதாகவே ஆர்டர் கொடுப்பது அவசியம். கடைசி நேர ஆர்டர்களில் தனித்துவம் ஏதும் இருக்காது. அவசரமாக வாங்குவதால் பொருத்தமாக இருக்காது.
டிசைனர் உடைகளிலும் ட்ரெடிஷனல் டச் வேண்டும் என விரும்புகிறவர்களுக்கும், இப்போது நிறைய சாய்ஸ் இருக்கிறது. பட்டு, சுங்குடி காட்டன் போன்ற மெட்டீரியல் லெகங்கா, கவுன் அனார்கலி போன்ற உடைகளை வடிவமைக்கலாம். இதுதான் இப்போது 'டிரடி டிரெண்டி' கான்செப்ட் ஆக உருவாகியிருக்கிறது. ஹோம்லி லுக் மாடல்களுக்கு என இரண்டும் கலந்த கலவையான ஆடை இது.
டிரெண்டி லுக் உடைகளில் விருப்பம் கொண்டவர்கள் நெட்டட், பனாரஸி போன்ற மெட்ரீயல்களில் வடிவமைக்கலாம்.
ரிசப்ஷனுக்கு உடை என்றால் கேன் கேன் ஸ்கர்ட், அண்ட் கிராப் டாப் தேர்ந்தெடுக்கலாம். இது அணிந்தால் மிகவும் தனித்துவத்துடன் காட்டும்.
மெஹந்தி நிகழ்ச்சிக்கு என்றால் பனாரஸி ஸ்கர்ட் டிசைனர் கிராப் டாப்களை மேட்ச்சாக அணியலாம்.
உடை தைக்க அளவு கொடுக்கும் முன்பே எடை குறைப்பு போன்ற முயற்சிகளை மேற்கொண்டு விட்டு தைக்க கொடுக்கவும். இல்லையென்றால் திருமண உடை சரியாக இருக்காது.
டிரெண்டுக்கேற்ற திருமண உடை தேர்வு செய்வதைவிட அது நமக்கு எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும். உடைக்கற்ற திருமண காலணிகளையும் தேர்வு செய்ய வேண்டும்.
நவீன திருமண வைபவங்களில் பல நிகழ்ச்சிகள் உண்டு. அதனால் சங்கீத்துக்கு சராரா, லெஹங்கா, முகூர்த்தத்துக்குப் பட்டுப்புடவை , டிசைனர் பிளவுஸ் என விதவிதமான உடைகளை டிசைன் செய்து கொள்ளலாம்.
திருமண உடை தயாரான உடனே ட்ரெயல் பார்த்துவிட வேண்டும். தேவைப்பட்டால் ஃபிட்டிங்கை ஆல்டர் செய்து கொள்ள வேண்டும். கொஞ்சம்தானே அட்சஸ்ட் செய்து கொள்ளலாம் என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் கடைசி நாளில் கடும் அவஸ்தை ஏற்படும்.
திருமண உடைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்வதை விட நேரில் சென்று பார்த்து வாங்குவதே நல்லது.