ARTICLE AD BOX
சென்னை: தனுஷ் நடிப்பு மட்டுமில்லாமல், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர். தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, ஹாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். தற்போது, இவர் இயக்கத்தில் பவிஷ், அனிக்கா சுரேந்தர், ப்ரியா வாரியர், மேத்யூ தாமஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்திற்கு அடுத்தபடியாக தனுஷ் இயக்கி நடிக்கும் படம் ‘இட்லி கடை’. அருண் விஜய் நடிக்கிறார்.
இந்நிலையில், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் எடுக்கபடவுள்ள அடுத்த படத்திற்கு புதுமுக நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுவதாக விளம்பரம் வெளியிடப்பட்டது.
இது குறித்து, அறிக்கை வெளியிட்டுள்ள வுண்டர்பார் பிலிம்ஸ் இயக்குனர் ஷ்ரேயஸ், ‘‘எனது பெயரிலோ அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரிலோ வரும் எந்தவொரு நடிகர், நடிகைகளுக்கான அழைப்புகளும் முற்றிலும் போலியானவை. இவை ஆதாரமற்றவை என்பதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு செல்வதற்காகவே இந்த அறிக்கை’’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்,அதில் ஒரு தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு அது என்னுடையது அல்ல என தெரிவித்துள்ளார். தனது புகைப்படத்தை வைத்து அந்த மோசடி கும்பல் இதனை செய்து வருவதாகவும் அனைவரையும் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் தெரிவித்துள்ளார்.