நடன நிகழ்ச்சியில் மகனை அறிமுக செய்த பிரபுதேவா... மகன் குறித்து நெகிழ்ச்சி பதிவு...

4 hours ago
ARTICLE AD BOX

சென்னை ஒய்எம்சிஏ திடலில் நடிகரும், நடன இயக்குநருமான பிரபு தேவா தன்னுடைய முதல் நடன நிகழ்ச்சியை பிப்ரவரி 22ஆம் தேதி நடத்தினார். இதில், நடிகர்கள் வடிவேலு,  தனுஷ், எஸ். ஜே. சூர்யா மற்றும் இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், பிரபு தேவா தான் நடித்த, நடன இயக்குநராகப் பணியாற்றிய பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். முக்கியமாக, ரௌடி பேபி பாடலுக்கு நடிகர் தனுஷும் காத்தடிக்குது பாடலுக்கு நடிகர் எஸ். ஜே. சூர்யாவும் பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடியது பலரையும் கவர்ந்தது.

#PrabhuDeva & #SJSuriya dancing in #Prabhudevaconcert 🔥🔥🔥 pic.twitter.com/vyY4fRQLq1

— Edwin Shares®️ (@edwinjosephr) February 23, 2025



மேலும், நடிகர்கள் பரத், சாந்தனு, லட்சுமி ராய், ரித்திகா சிங், சானியா ஐயப்பன், ப்ரீத்தி அஸ்ராணி, பார்வதி நாயர், சாக்க்ஷி அகர்வால், உள்ளிட்டோர் பிரபு தேவாவுடன் இணைந்து நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

இதே நிகழ்வில் பிரபு தேவா தன் மகனையும் மக்களிடையே அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த மேடையில் தன் மகனுடன் இணைந்து `பேட்ட ராப்' பாடலுக்கு நடனமாடியிருந்தார் பிரபுதேவா. தற்போது தன் மகனை அறிமுகப்படுத்தியது குறித்தும், அவரைத் தொடர்ந்து அவரின் மகனும் நடனத்தின் பக்கம் வருவது குறித்தும் பதிவிட்டிருக்கிறார் பிரபு தேவா.

Proud to introduce my son Rishii Ragvendar Deva, as we share the spotlight for the first time! This is more than dance—it’s legacy, passion, and a journey that’s just getting started. 🙏❤️❤️❤️ pic.twitter.com/L00r6VN5Kc

— Prabhudheva (@PDdancing) February 25, 2025


அதில், " எனது மகன் ரிஷி ராகவேந்திரா தேவாவை அறிமுகப்படுத்துவதில் பெருமைகொள்கிறேன். முதல் முறையாக நாங்கள் ஒரு ஸ்பாட்லைட் நிறைந்த மேடையை பகிர்ந்திருந்தோம். இந்த விஷயம் நடனத்தையும் தாண்டியது. மரபு, பேரார்வம் மற்றும் பயணம் தற்போது தொடங்கியிருக்கிறது." என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

Read Entire Article