ARTICLE AD BOX
மகா சிவராத்திரியை மகா கும்பமேளாவில் குளித்துக் கொண்டாடும் விஜயகாந்த் மகன்.. செம போட்டோ!
சென்னை: மகா சிவராத்திரி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவ ஆலயங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வழிபட்டு வருகின்றனர். இன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவனை பெருவாரியான மக்கள் வழிபட காத்திருக்கின்றனர். இந்நிலையில், மகா கும்பமேளாவிற்கு சென்ற கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் வாரணாசியில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அப்பாவை போலவே சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற குறிக்கோளுடன் சண்முகபாண்டியன் படங்களில் நடித்து வருகிறார். விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு அவருக்கு உதவி செய்வதாக விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் வாக்கு கொடுத்துள்ளனர்.

கடவுள் பக்தி அதிகம் கொண்ட விஜயகாந்த் மகன்கள் இருவரும் சமீபத்தில் மகா கும்பமேளாவுக்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு சண்முகபாண்டியன் வெளியிட்ட போட்டோக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

விஜயகாந்த் மகன்: மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகரன் அரசியல் களத்திலும் இளைய மகன் சண்முகபாண்டியன் சினிமாவிலும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். சகாப்தம், மதுர வீரன் உள்ளிட்ட படங்களில் நடித்த சண்முகபாண்டியன் படைத் தலைவன் படத்திலும் நடித்துள்ளார். பொங்கலுக்கு அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் வெளிநாட்டு உரிமை தொடர்பான வழக்கில் சிக்கி இன்னமும் ரிலீஸ் ஆகாமல் வெயிட்டிங்கில் உள்ளது.

மகா கும்பமேளாவில் மகா சிவராத்திரி: மகா சிவராத்திரியை முன்னிட்டு வாரணாசியில் மகா கும்பமேளாவில் குளித்துக் கும்பிடும் புகைப்படங்களை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சண்முகபாண்டியன் ஷேர் செய்துள்ளார். அவரது போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஆஜானுபாகுவாக உள்ளாரே என்றும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும் என்றும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

விஜய்யுடன் சந்திப்பு: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடிகர் விஜய் கேப்டன் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அவரது இரு மகன்களையும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தளபதி ரொம்பவே கனிவானவர் என சண்முகபாண்டியன் போஸ்ட் செய்திருந்தார். ஹீரோவாக இல்லாமல் வில்லனாக நடித்தால் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவியும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
