சூப்பர் வீக் எண்ட் கம்மிங்.. இந்த வார ஓடிடியின் சூப்பர் அப்டேட்!.. மிஸ் பண்ணாதீங்க

3 hours ago
ARTICLE AD BOX

OTT Tamil: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் மிகப்பெரிய ட்ரீட் காத்திருக்கும் வகையில் சூப்பர் படங்கள் ஓடிடிக்கு வருகை தர இருக்கிறது. அதன் சூப்பர் அப்டேட் அடங்கிய தொகுப்பு தான் இது.

சங்கீராந்தி வஸ்துனம்: தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் ஆக அமைந்த சங்கீராந்தி வஸ்துனம் மார்ச் 1ஆம் தேதி ஜீ 5 ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர்.

குடும்பஸ்தன்: மணிகண்டனின் வித்தியாசம் அடித்தால் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்த குடும்பஸ்தன். ஹாட்ரிக் வெற்றி படமான இது பிப்ரவரி 28ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

விடாமுயற்சி: ஏறத்தாழ இரண்டு வருடங்களாக அஜித் ரசிகர்கள் காத்திருந்த திரைப்படம் விடாமுயற்சி. ஆனால் அவருடைய சாதாரண மாஸ் காட்சிகள் எதுவும் இல்லாமல் வெளியாகி ரசிகர்களை அப்செட் செய்ததுதான் உண்மை. நாலு வாரங்களை மட்டுமே கடக்கும் இப்படத்தை நெட்பிளிக்ஸ் மார்ச் 3ஆம் தேதி வெளியிட இருக்கிறது.

எமோஜி: தமிழ் வெப் சீரிஸ் ஆஹா ஓடிடியில் பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மகத், மானஷா சவுத்ரி மற்றும் தேவிகா நடித்திருக்கும் இதில் எப்போதும் போல காதல் வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கும் இளைஞனின் கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

சாட்சி பெருமாள்: வயது முதிர்ந்த பாடகர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் திரைப்படம் டெண்ட்கோட்டா ஓடிடியில் வெளியாக இருக்கிறது. மேலும் சில தினங்களும் கடைசிநேர வெளியீட்டில் இடம் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article