ARTICLE AD BOX
ராஞ்சி: தோனி சமீபத்தில் தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள தியோரி மா கோவிலுக்கு சென்று வழிபட்டார். இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு கோப்பை வெல்லப் போவது உறுதியான ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.
மூன்று முக்கிய கிரிக்கெட் தொடர்களுக்கு முன் தோனி இதே தியோரி மா கோவிலுக்கு சென்று வழிபட்டபோது இந்திய அணி கோப்பையை வென்று இருந்தது. அதே போல, இந்த முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
2011 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பைக்கு முன் தோனி இந்திய அணி கேப்டனாக இருந்த போது ராஞ்சியில் உள்ள இதே தியோரி மா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அப்போது இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அடுத்து 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு முன்னதாகவும் தோனி இதே கோவிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
அப்போது தோனி எந்த இந்திய கேப்டனும் செய்யாத அசாத்தியமான சாதனை ஒன்றை செய்தார். டி20 உலக கோப்பை ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்று இருந்தார். அடுத்து 2023 ஐபிஎல் தொடருக்கு முன் தோனி தியோரி மா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
அந்த ஆண்டு எப்போதும் இல்லாத அதிசயமாக இரண்டு நாட்கள் ஐபிஎல் இறுதி போட்டி நடத்தப்பட்டு. அதன் முடிவில் கடைசி பந்தில் ஜடேஜா அடித்த பவுண்டரியால் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. அது சிஎஸ்கே அணியின் ஐந்தாவது ஐபிஎல் கோப்பையாக அமைந்தது. தற்போது தோனி தனது 42 வயதில் மீண்டும் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று விளையாட இருக்கிறார்.
CSK- தோனி ஐபிஎல் தொடரில் அடித்த அரை சதம் எத்தனை? தோனியின் நாட் அவுட் எண்ணிக்கை எத்தனை?
சிஎஸ்கே அணி ஆறாவது ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு தோனி ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது. 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரிலாவது சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் தோனி உறுதியாக இருக்கிறார். அதற்காகவே இந்த சிறப்பு வழிபாட்டை அவர் நடத்தியதாக கூறப்படுகிறது. அவர் சமீபத்தில் ஐபிஎல் தொடருக்கான பேட்டிங் பயிற்சியை துவக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.