ஆஸ்திரேலிய அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம்

3 hours ago
ARTICLE AD BOX

கான்பெர்ரா,

இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலியா அடுத்ததாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. டெஸ்ட் போட்டிகள் காலேவிலும், ஒருநாள் போட்டிகள் கொழும்புவிலும் நடைபெறுகின்றன. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய ஆண்கள் அணிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளரை நியமித்துள்ளது. அதன்படி, ஆடம் கிரிபித் ஆஸ்திரேலிய ஆண்கள் அணியின் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடம் தனது விரிவான அனுபவத்தை தேசிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வந்து எங்கள் பயிற்சி அமைப்பின் முக்கிய அங்கமாக மாறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மெக்டொனால்டு கூறியுள்ளார்.�

Read Entire Article