முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் விவாகரத்து?

5 hours ago
ARTICLE AD BOX

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக். 47 வயதான இவர் இந்திய அணிக்காக 104 டெஸ்ட், 251 ஒரு நாள் மற்றும் 19 டி.20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சேவாக், ஆர்த்தி அஹ்லாவத் என்பவரை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யவீர், வேதாந்த் என்ற 2 மகன்கள் உள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சேவாக், மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

அண்மையில் தீபாவளி பண்டிகையினை சேவாக் தனது 2 மகன்கள் மற்றும் தாயாருடன் கொண்டாடினார். இது தொடர்பான படங்கள் வெளியான நிலையில் மனைவி ஆர்த்தி அதில் இல்லை. இந்நிலையில் 20 ஆண்டு கால திருமண பந்தத்தில் இருந்து விலகி இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதில் இருந்து விலகி உள்ளனர். ஆனால் விவாகரத்து தொடர்பாக சேவாக், அதிகாரப்பூர்வமாக இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

The post முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் விவாகரத்து? appeared first on Dinakaran.

Read Entire Article